பெற்றோரே இந்த 3 விஷயத்தில் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீங்க.. உங்கள வெறுப்பாங்க!!
Parenting Mistakes To Avoid : பெற்றோரே, நீங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக நினைத்து செய்யும் இந்த மூன்று விஷயங்கள் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வாய்ப்புள்ளது.

பெற்றோரே இந்த 3 விஷயத்தில் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீங்க.. உங்கள வெறுப்பாங்க!!
பெற்றோர் குழந்தைகளை நன்றாக வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் சில விஷயங்களை செய்ய குழந்தைகளை தொடர்ந்து கட்டாயப்படுத்தும் போது அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பு வரலாம். இதனால் அவர்களுடைய எதிர்காலம் கூட பாதிக்கப்படலாம். பெற்றோரின் கண்டிப்பு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை அடிக்கடி சொல்லும்போது அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்படுகிறது. இந்த பதிவில் குழந்தைகளுக்கு எந்த விஷயத்தை எப்படி சொல்ல வேண்டும், எதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆசை திணிப்பு:
பெற்றோர் குழந்தையின் சின்ன விஷயத்திலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம். அவர்களுடைய நடத்தையை முறையாக கவனிக்காவிட்டால் வழிதவறும் வாய்ப்புள்ளது. ஆனால் கண்டிப்பு வேறு, குழந்தைகளின் மீது உங்களுடைய ஆசையை திணிப்பது வேறு. உங்களுடைய விருப்பங்களை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். குழந்தைகளின் ஆசைகளை அடக்கக் கூடாது. அவர்களின் ஆசையை தடுத்து உங்கள் விருப்பதை நிறைவேற்றிக் கொள்வது தவறான போக்கு. இது அவர்களின் வாழ்நாள் முழுக்க ஆறாத காயமாக மாறிவிடும். இதைத் தொடர்ந்து நீங்கள் செய்வதால் உங்களிடமிருந்து குழந்தைகள் விலக தொடங்கி விடுவார்கள் ஒரு கட்டத்தில் உங்களை எதிரியாக கூட கருதலாம்.
இதையும் படிங்க: ஒரு பிள்ளை இருக்கும் பெற்றோர் செய்யக்கூடாத '5' தவறுகள்.. பின்விளைவுகள் பயங்கரம்
கல்வி:
கல்வியில் உங்களுடைய குழந்தையின் விருப்பங்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் அவர்கள் படிக்க விரும்புவதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும் உதாரணமாக பத்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் அதற்குப் பிறகு ஒரு வேலை கலை சார்ந்து படிக்க விரும்பலாம் அது தொடர்பாக அவர்களுடைய எதிர்காலத்தை குறித்து அவர்கள் கனவு கண்டிருக்கலாம் ஆனால் பெற்றோர் அந்த விருப்பத்தை மதிக்காமல் அழுத்தம் கொடுத்தால் அறிவியல் குழுவை தேர்வு செய்ய நேரலாம் இதனால் அவர்களுடைய கனவை மறந்துவிட்டு வேறொரு துறையில் படிக்க நேரிடுகிறது.
இதையும் படிங்க: பெற்றோர் குழந்தைங்க கிட்ட 'எப்படி' நடந்துக்கனும்? முக்கியமான '5' டிப்ஸ்
புரிதல்
இப்படி அவர்கள் படித்து நல்ல வேலைக்கு சென்று நன்றாக சம்பாதித்தாலும் கூட தாங்கள் நினைத்ததை செய்ய முடியாத வருத்தமும் இயக்கவும் அவர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும் அவர்களுக்கு திருப்தி கிடைக்காது இதனால் பெற்றோர் மீது வெறுப்பும் அதிருப்தியும் கோபமும் கூட ஏற்படலாம் இந்த மாதிரி குழந்தைகளுடைய விருப்பங்களை புறக்கணித்துவிட்டு தங்களுடைய ஆசைகளை பெற்றோர் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கக் கூடாது சமூகத்தையும் உறவினர்களையும் கருத்தில் கொண்டு பெற்றோர் முடிவெடுப்பது குழந்தைகளின் மனதை பாதிக்க மிகப்பெரிய காரணியாக அமைந்து விடும் குழந்தைகளுடைய விருப்பங்களையும் ஆசைகளையும் பெற்றோர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்களுடன் உரையாடி அவர்களுடைய மனதை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி முடிவெடுப்பது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே புரிதலையும் நல்ல பிணைப்பையும் ஏற்படுத்தும் குழந்தைகள் தங்களுடைய எதிர்காலத்தை மகிழ்ச்சியாக வாழவும் இது வழிவகுக்கும்.
தொழில்:
குழந்தைகள் தாங்கள் விரும்பிய தொழில் செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அமைய வேண்டும். அதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெற்றோர் தடுக்கக்கூடாது. நீங்கள் விரும்பிய துறையை, நீங்கள் செய்ய வேண்டும் என நினைத்த தொழிலை உங்கள் குழந்தைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலை செய்வதற்கான உரிமையும் சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அவர்களை கட்டாயப்படுத்தினால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படக்கூடும்.
திருமணம்:
திருமணத்திற்கான அழுத்தத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் எப்போதும் கொடுக்கக் கூடாது. அவர்கள் குழந்தைகள் அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். திருமண அழுத்தத்தை பெற்றோர் கொடுப்பதால் அவர்கள் விருப்பமின்றி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் பெற்றோர் மீது அதிருப்தி ஏற்படலாம். அவர்களுடைய எதிர்காலமும் பாதிக்கப்படலாம்.
கட்டாயம்! கட்டாயம்!
குழந்தைகளை எப்போதும் நச்சரிப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். அவர்களிடம் அதை செய்யாதே, இதை செய்யாதே என எப்போதும் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்காதீர்கள். கல்வி, தொழில், திருமணம் போன்ற விஷயங்களை முடிவெடுக்கும் சுதந்திரம் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். இது தொடர்பான விஷயங்களில் பெற்றோர் அவர்களை எந்த அழுத்தத்திற்கும் உட்படுத்தக்கூடாது. அவர்கள் இந்த விஷயத்தில் தலையிடும்போது குழந்தைகளுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது