- Home
- Lifestyle
- Tips to Beat Loneliness: தனிமையா ஃபீல் பண்றீங்களா? மனச்சோர்வை விரட்ட 10 சிம்பிள் டிப்ஸ் இதோ!
Tips to Beat Loneliness: தனிமையா ஃபீல் பண்றீங்களா? மனச்சோர்வை விரட்ட 10 சிம்பிள் டிப்ஸ் இதோ!
Tips to Beat Loneliness: தனிமை உணர்வை விரட்டவும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும் நாம் பின்பற்ற வேண்டிய எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.

1. காலையில் உங்களுக்கான நேரம்
தூங்கி எழுந்த உடனே மொபைலை பார்க்காதீர்கள். ஒரு 10 நிமிடம் உங்களுக்காக ஒதுக்குங்கள். ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள், ஜன்னலைத் திறந்து வெயிலில் நில்லுங்கள், 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். காலையில் அமைதியாக ஆரம்பித்தால், நாள் முழுவதும் தனிமை உணர்வு குறையும்.
2. 'நன்றி' டைரி எழுதுங்கள்
தினமும் இரவில், அன்றைக்கு நடந்த 3 நல்ல விஷயங்களை டைரியில் எழுதுங்கள். உதாரணமாக, ஆட்டோக்காரர் சிரித்தது, டீ நன்றாக இருந்தது, அம்மா போன் செய்தது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நமது மூளை எப்பொழுதும் எதிர்மறை விஷயங்களைத்தான் அதிகமாக ஞாபகம் வைத்துக்கொள்ளும். இந்தப் பழக்கம் நேர்மறையாக யோசிக்க வைக்கும்.
3. செடி அல்லது செல்லப்பிராணி வளர்க்கலாம்
தனிமையை விரட்டச் சிறந்த மருந்து, மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவதுதான். ஒரு சின்ன மணி பிளான்ட், துளசி செடி அல்லது ஒரு மீன் கூட வளர்க்கலாம். தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவது, உணவு தருவது மூலமாக ஒரு நல்ல பிணைப்பு உருவாகும்.
4. தினமும் 20 நிமிடம் அமைதியாக நடங்கள்
நடைபயிற்சிக்குப் போகும்போது காதில் ஹெட்போன், கையில் கைப்பேசி எதுவும் வேண்டாம். சும்மா நடந்துகிட்டே சுத்தி நடக்குறதை வேடிக்கை பாருங்கள். மக்கள் நடமாட்டம், கடைகள், மரங்கள் என்று ரசியுங்கள். இது மூளையில் செரோடோனின் அளவை அதிகரித்து, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
5. ஒருவர்கிட்டயாவது மனது விட்டு பேசுங்கள்
வாட்ஸ்அப்பில் 100 பேருக்கு 'ஹாய்' சொல்வதை விட, ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் கிட்ட 10 நிமிடம் மனது விட்டு பேசுங்கள். தொலைபேசியில் பேசுவதை விட, நேரில் அல்லது காணொளி வாயிலாகப் பேசுவது ரொம்ப நல்லது
6. சமூக வலைதளங்களுக்கு பிரேக்
நீங்கள் தனியாக இருக்கும்போது, இன்ஸ்டாகிராமில் எல்லாரும் பார்ட்டி பண்றதைப் பார்த்தால் இன்னும் தனிமையாகத்தான் தோன்றும். அதனால, ஒரு நாளைக்கு குறைஞ்சது 2 நேரமாவது கைப்பேசியை 'Do Not Disturb' முறையில் வையுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள்.
7. புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்
தினமும் 15 நிமிடம், இதற்கு முன்பு நீங்கள் செய்யாத ஒரு விஷயத்தைச் செய்யுங்கள். புதுசா ஒரு சமையல், ஒரு பாட்டு, அல்லது சும்மா படம் வரைவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். புதுசாகக் கற்றுக்கொள்ளும்போது தன்னம்பிக்கை வளரும்.
8. வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்
கலைந்து கிடக்கிற வீடு, மனசையும் கலைத்துவிட்டுவிடும். படுக்கையை மடித்து வைப்பது, மேசையைச் சுத்தமாக வைத்திருப்பது மாதிரியான சின்னச் சின்ன வேலைகள் கூட, உங்கள் வாழ்க்கையை நீங்கள் சரியாகக் கொண்டு போகிறீர்கள் என்கிற உணர்வைக் கொடுக்கும்.
9. உதவி கேட்க தயங்காதீர்கள்
நாம் தனிமையாக உணர முக்கிய காரணம், மற்றவர்கள் கிட்ட உதவி கேட்கத் தயங்குவதுதான். இன்றைக்கு ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். நண்பர்கிட்ட, 'என் மனசு சரியில்ல, கொஞ்சம் பேசுறியா?' என்று கேளுங்கள். நிறைய பேர் உதவி செய்யத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
10. இரவில் தூங்குவதற்கான வழக்கம்
இரவு 11 மணிக்கு மேல் மொபைலை பயன்படுத்தாதீர்கள். கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் குடிச்சிட்டு, ஒரு புத்தகம் படியுங்கள். ராத்திரியிலதான் தனிமை உணர்வு அதிகமாக இருக்கும். சரியான நேரத்திற்குத் தூங்குவது, மூளைக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்கும்.
தனிமையாக உணர்வது ஒரு பலவீனம் கிடையாது. உங்களுக்காக நீங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் என்று சொல்கிற ஒரு சிக்னல் மட்டும்தான் அது. இந்தப் பழக்கங்கள் ஒரே நாளில் மேஜிக் செய்துவிடாது. ஆனா 21 நாள் தொடர்ந்து பின்பற்றிப் பாருங்கள், மனசு ரொம்ப லேசான மாதிரி உணர்வீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.





