அம்பானி குடும்ப பெண்களின் விலையுயர்ந்த நகைகளும், விலையும்!!
அம்பானி குடும்ப பெண்களின் நகை சேகரிப்பு: அம்பானி குடும்ப பெண்களிடம் விலையுயர்ந்த நகைகள் உள்ளன. 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வளையல் இவை எல்லாம் சர்வ சாதாரணம்.

நீதா அம்பானியின் வைர-மரகத நெக்லஸ்
ஜாம்நகரில் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் முதல் நிகழ்வில், நீதா அம்பானி வைரம் மற்றும் மரகத கற்களால் ஆன நெக்லஸ் அணிந்திருந்தார். ஊடக செய்திகளின்படி, அந்த நெக்லஸின் மதிப்பு 400-500 கோடி ரூபாய். இது உலகின் மிக விலையுயர்ந்த நெக்லஸ்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
ஸ்லோகா அம்பானி வைர நெக்லஸ்
முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஷ்லோகா மேத்தாவுக்கு திருமண பரிசாக அம்பானி குடும்பத்தினர் Mouawad L’Incomparable நெக்லஸை வழங்கினர். 407.48 காரட் டோபாஸ் வைரத்தால் ஆன இந்த நெக்லஸின் மதிப்பு 451 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
நீதா அம்பானியின் விலைமதிப்பற்ற வளையல்
2024 மிஸ் வேர்ல்ட் இறுதிப் போட்டியில், நீதா அம்பானி முகலாயர் காலத்து வளையலை அணிந்திருந்தார். மாணிக்கம், வைரம் மற்றும் ஸ்பைனல் ஆகியவற்றால் ஆன இந்த வளையலுக்கு வரலாற்று முக்கியத்துவம் அதிகம். செய்திகளின்படி, இதன் மதிப்பு 200 கோடி ரூபாய்க்கும் அதிகம்.
இஷா அம்பானியின் வைர நெக்லஸ்
செய்திகளின்படி, தாயைப் போலவே நகைகள், பேஷன் ஆடைகள் அணிவதில் இஷா அம்பானி அதிக கவனம் செலுத்தக் கூடியவர். இவரது நகை சேகரிப்பு மிகவும் ஆடம்பரமானது. அவரிடம் 167 கோடி ரூபாய் மதிப்பிலான அன்-கட் வைர நெக்லஸ் உள்ளது. இதை அவர் சிறப்பு நிகழ்வுகளில் அணிந்து கொள்கிறார். இது சோக்கர் ரக நெக்லஸ் ஆகும்.
நீதா அம்பானியின் வைர மோதிரம்
ஜாம்நகரில் அனந்த் திருமண விழாவில் நீதா அம்பானி 52.58 காரட் வைர மோதிரம் அணிந்திருந்தார். இதன் மதிப்பு சுமார் 53 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த அழகிய மோதிரம் அவரது சேகரிப்புகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
ராதிகா மெர்ச்சண்ட்டின் முத்து-வைர நெக்லஸ்
நீதா அம்பானி தனது இளைய மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கு முத்து மற்றும் வைரத்தால் ஆன நெக்லஸை பரிசளித்தார். அதை அவர் ஒரு குடும்ப விழாவில் அணிந்திருந்தார். இதன் சரியான மதிப்பு தெரியவில்லை என்றாலும், இது மிகவும் விலை உயர்ந்தது என்று கூறப்படுகிறது.
மறுப்பு: இந்த விவரங்கள் ஊடக செய்திகள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.