MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரயிலில் Waiting List கன்பார்ம் ஆகுமா? ஆகாதா? அக்யூரேட்டாக சொல்லும் RailOne AI மேஜிக்! முழு விவரம்

ரயிலில் Waiting List கன்பார்ம் ஆகுமா? ஆகாதா? அக்யூரேட்டாக சொல்லும் RailOne AI மேஜிக்! முழு விவரம்

RailOne: ரயிலில் Waiting List கன்பார்ம் ஆகுமா? ஆகாதா? என்பதை ரெயில் ஒன் செயலி துல்லியமாக கணிக்கிறது. மேலும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடியும் வழங்குகிறது.

2 Min read
Author : Rayar A
Published : May 15 2026, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ரயில் போக்குவரத்து முதுகெலும்பு
Image Credit : our own

ரயில் போக்குவரத்து முதுகெலும்பு

இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ரயில்களில் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது நமக்கு இருக்கும் மிகப்பெரிய பயம் என்னவென்றால் டிக்கெட் உறுதி செய்யப்படுமா? அல்லது வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்குமா? என்பது தான். இப்போது, ​​இந்தப் பிரச்சனைக்கு ரயில்வே ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளது.

ரெயில்ஒன் செயலில் சூப்பர் வசதி

இதன் மூலம் உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படுமா இல்லையா என்பதை நீங்கள் முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். அது எப்படி என்பது குறித்து பார்ப்போம். ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் 'ரெயில்ஒன்' என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு மட்டுமல்லாமல், பல ஸ்மார்ட் அம்சங்களையும் வழங்குகிறது. அதன் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான காத்திருப்பு முன்கணிப்பு அம்சம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
கன்பார்ம் ஆகுமா? ஆகாதா? முன்கூட்டியே கணிக்கலாம்
Image Credit : Asianet News

கன்பார்ம் ஆகுமா? ஆகாதா? முன்கூட்டியே கணிக்கலாம்

நீங்கள் ஒரு பயணச்சீட்டை முன்பதிவு செய்யும்போது, ​​உங்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள பயணச்சீட்டு உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை இந்தச் செயலி உங்களுக்குத் தெரிவிக்கிறது. முன்னதாக, இந்த முன்கணிப்பின் துல்லியம் சுமார் 53% ஆக கருதப்பட்டது, ஆனால் இப்போது அதன் துல்லியம் கிட்டத்தட்ட 94% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்கள் பயணச்சீட்டு உறுதி செய்யப்படுமா இல்லையா என்பது குறித்து இப்போது ஒரு சிறந்த முடிவைப் பெற முடியும்.

பணம், நேரம் மிச்சமாகும்

நீங்கள் சென்னையில் இருந்து அல்லது மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கு டிமாண்ட் அதிகம் உள்ள ரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பயணச்சீட்டு உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று செயலி ஏற்கனவே காட்டினால், நீங்கள் வேறு ரயில், வேறு தேதி அல்லது வேறு பயண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது கடைசி நேரச் சிக்கல்களைக் குறைத்து, பணத்தையும் நேரத்தையும் சேமித்து, பயணத் திட்டமிடலையும் எளிதாக்கும்.

33
முன்பதிவில்லாத டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி
Image Credit : stockPhoto

முன்பதிவில்லாத டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி

இதுமட்டுமின்றி RailOne செயலியில் நீங்கள் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளையும், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளையும் பெற முடியும். மேலும் ரயில்களின் லைவ் லொக்கேஷன், ஸ்டேஷன் லைவ் லொக்கேஷன், ரயில் நிலைய ரூம்களில் முன்பதிவு செய்தல் போன்ற பல்வேறு வசதிகளையும் செய்து கொள்ள முடியும்.

இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பயணிகள் ஆன்லைனில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது 3% வரை தள்ளுபடி பெறலாம். அதாவது, நடைமேடையில் வரிசையில் நிற்கும் சிரமம் இல்லாமல், நீங்கள் வீட்டிலிருந்தே பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து தள்ளுபடியையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி பயணச்சீட்டு
தொடர்வண்டிப் போக்குவரத்து
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Recommended image2
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!
Recommended image3
150 vs 151: மகனை ஜெயிக்க வைத்துவிட்டு மறைந்த தாய்... நெஞ்சை உருக்கும் தேர்தல் களம்!
Related Stories
Recommended image1
இனி ஒரு ஆப் போதும்! ரயில்வேயின் RailOne - டிக்கெட் முதல் உணவு வரை அனைத்தும் உள்ளங்கையில்!
Recommended image2
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved