MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்தியக் குடியுரிமை எங்களுக்கு வேண்டாம்... நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள்!

இந்தியக் குடியுரிமை எங்களுக்கு வேண்டாம்... நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள்!

2023ஆம் ஆண்டில், 2,16,219 பேர் இந்திய குடியுரிமையைக் கைவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எந்தெந்த நாடுகளில் குடியேறுகிறார்கள் தெரியுமா?

2 Min read
Author : SG Balan
| Updated : Aug 14 2024, 09:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Global Indian citizenship trends

Global Indian citizenship trends

சிலர் மேற்படிப்புக்காகவும் சிலர் வேலை மற்றும் வேலைக்காகவும் சிலர் வியாபாரத்திற்காகவும் இந்தியாவை விட்டு வெளியேறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள், ஊழியர்கள், தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இப்படிப் போனவர்கள் நல்ல வேலை, வருமானம், ஆடம்பரமான, அதிநவீன வாழ்க்கைக்குப் பழகி, சொந்த ஊருக்கு வரவே விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். வெளிநாட்டில் குடியேறி அந்நாட்டு குடியுரிமையையும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்தியக் குடியுரிமையைத் துறக்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Indian citizenship

Indian citizenship

நாளுக்கு நாள் தாயகத்தை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுக்கும் நபர்களே அதிகம். சமீபத்தில், இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து வெளிநாடுகளில் குடியேறியவர்களின் புள்ளிவிவரங்களை இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 2023ல் 2,16,219 பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய குடியுரிமையை துறந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. 2023ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் மொத்தம் 2,25,620 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர். 2021ல் 1,63,370, 2020ல் 85,256, 2019ல் 1,44,017 பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டு வெளியேறினர். 2011ஆம் ஆண்டு முதல் மொத்தம் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

35
Indians renouncing citizenship

Indians renouncing citizenship

இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வருகின்றனர். குறிப்பாக பணக்கார இந்தியர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் குடியேறுகிறார்கள். அந்த நாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் தொழிலதிபர்களும் பணக்காரர்களும் மிக எளிதாக குடியுரிமை பெற்று நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுகிறார்கள். மற்றவர்கள் நல்ல வேலையில் செட்டிலாகி குழந்தைகளுடன் வெளிநாட்டில் தங்கிவிடுகிறார்கள்.

பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) பல நாடுகளில் குடியேறியவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்திய பணக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் பணக்கார நாடுகளில் வாழ விரும்புகிறார்கள். அதற்காக பெரும் முதலீடுகளைச் செய்கிறார்கள். சிலர் நிரந்தர விசாக்களுக்காக அதிக அளவில் செலவு செய்கிறார்கள். சிலர் நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கி, வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெறுகிறார்கள். 

45
Indians moving abroad

Indians moving abroad

இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைக்காக செல்கின்றனர். ஆனால், பெரும்பாலான இந்தியர்கள் தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்வது போர்ச்சுகல் தான். இந்திய பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பெரும்பாலும் போர்ச்சுகலில் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் நிரந்தர குடியிருப்பு மற்றும் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு உதவும் ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் இதுபற்றி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

55
Indian expatriates

Indian expatriates

போர்ச்சுகலுக்கு அடுத்தபடியாக இந்திய தொழிலதிபர்கள் முதலீடுகள் மூலம் குடியேற ஆர்வம் காட்டும் நாடு ஆஸ்திரேலியா. இந்த நாட்டில் முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சொகுசு வாழ்க்கை வாழ முடிவதால், ஆஸி.யில் நிரந்தர குடியிருப்பு அமைத்து வருகின்றனர்.

இந்திய பணக்காரர்கள் ஆர்வம் காட்டும் நாடுகளில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதன் பிறகு மட்லா, கிரீஸ் போன்ற நாடுகள் உள்ளன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Governance : விவாதத்திற்கு பதில் கூச்சல் : இளைஞர்களுக்கு புதிய இந்தியா தரும் பாடம்!
Recommended image2
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் ஃபார்ச்சூனர் கார் பரிசு... 6 வயது பேரனுக்காக பாட்டி அடித்த ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved