வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எப்போது இயக்கம்? முதலில் எங்கு ஓடப்போகுது! முக்கிய அப்டேட்!
இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது எப்போது இயக்கம்? எந்த மாநிலத்தில் இயக்கப்பட உள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.

India's First Sleeper Vande Bharat Train: இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்ய முடியும் என்பதால் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
India's First Sleeper Vande Bharat Train
வந்தே பாரத் ரயிலுக்கு மவுசு அதிகரிப்பு
இந்தியாவில் தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே செல்ல முடியும் என்பதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்
தமிழ்நாட்டில் சென்னை-நாகர்கோவில், சென்னை-மைசூரு, சென்னை-கோவை என பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர அனைத்து மாநிலங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களே இயங்கி வருகின்றன. படுகை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
டிரம்ப் தடாலடியால் விமானக் கட்டணம் சரிவு! ரூ.37,000 ல் அமெரிக்கா போகலாம்!
Vande Bharat sleeper Train
கேரளாவில் முதல் ரயில் இயக்கம்
அனைத்து மாநிலங்களிலும் முக்கியமான நகரங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் கேரள மாநிலத்தில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்-மங்களூரு, கன்னியாகுமரி-ஸ்ரீநகர்
திருவனந்தபுரம்-மங்களூரு வழித்தடத்தை தவிர, திருவனந்தபுரம்-பெங்களூரு மற்றும் கன்னியாகுமரி-ஸ்ரீநகர் போன்ற புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டு வருகிறது. கேரளாவின் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 823 பயணிகள் பயணம் செய்ய முடியும். இதில் ஏசி 3-டைர் இருக்கைகள் 611, ஏசி 2-டைர் இருக்கைகள் 188 மற்றும் முதல் வகுப்பு ஏசி இருக்கைகள் 24 ஆகியவை அடங்கும்.
Vande Bharat, Indian Railway
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சிறப்பு அம்சங்கள்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பயணிகளுக்கு ஏற்ற வகையில் நவீன அம்சங்கள் உள்ளன. இதன் முழு விவரம் இதோ:
* USB சார்ஜிங் போர்ட்களுடன் ஒருங்கிணைந்த வாசிப்பு விளக்குகள்
* பொது அறிவிப்பு மற்றும் காட்சி தகவல் அமைப்புகள்
* பாதுகாப்பிற்காக உட்புற காட்சி பேனல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள்
* மேம்படுத்தப்பட்ட உள் சேவைக்கான மாடுலர் பேன்ட்ரிகள்
* மாற்றுத்திறனாளி பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக பெர்த்கள் மற்றும் கழிப்பறைகள்
* மேம்படுத்தப்பட்ட ரயில் பாதுகாப்பிற்கான கவாச் பாதுகாப்பு அமைப்பு
* கூடுதல் வசதிக்காக சூடான நீர் ஷவர் பொருத்தப்பட்ட முதல் AC பெட்டிகள்
45 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்காக அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே