MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பூமியை மாசுபாட்டிலிருந்து காப்பாற்ற 13 வழிகள்!

பூமியை மாசுபாட்டிலிருந்து காப்பாற்ற 13 வழிகள்!

பூமியை மாசுபாட்டிலிருந்து காப்பாற்றும் 13 வழிகள் குறித்து இங்கு காணலாம்

3 Min read
Manikanda Prabu
Published : Aug 06 2023, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114

பூமியைப் பராமரிப்பது அதன் குடிமக்களாகிய நமது தலையாய கடமை. ஆனால், அதனை பெரும்பாலும் நாம் மாசுபடுத்தியே வைத்துள்ளோம். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், தயிர் டப்பாக்கள் மற்றும் ஸ்ட்ராக்களை ஒருநாள் தானே பயன்படுத்துக்கிறோம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவை பல ஆண்டுகளாக மட்கிப்போகாமல் அப்படியே இருந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும். மேலும் அந்த மாசு வாழ்விடங்களுக்கும் அங்கு வாழும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் மூலம் குப்பைகளை குறைத்து பூமியை மாசுபாட்டில் இருந்து நம்மால் காப்பற்ற முடியும்.

214

1. பலூன்களை தவிர்க்கவும்


பூமியில் போடப்படும் பலூன்கள், இறுதியாக கடலுக்கு வந்து அது கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கடல்வாழ் உயிரினங்களோ அல்லது கால்நடைகளோ அவற்றை உணவு என நினைத்து உட்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, பார்ட்டிகளில் பலூன்களைத் தவிர்த்து, உங்களது நண்பர்களையும் அவ்வாறே செய்யச் சொல்லுங்கள். அதற்கு பதில் வேறு அலங்காரங்களை பயன்படுத்துங்கள்

314

2. குப்பை தொட்டியை பயன்படுத்துங்கள்


எப்பொழுதும் குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போடுங்கள். வெளியில் போடப்படும் குப்பைகள் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி கடலில் கலக்கும். குப்பை கிடங்கிற்கு முறையாக கொண்டு வரப்படும் குப்பைகள் பாதுகாப்பாக அகற்றப்படுகிறது.

414

3. மீன்கள் மீதான கவனம்


நீங்கள் மீன்பிடிக்கச் சென்றால், வலைகளை அப்படியே தண்ணீரில் போட்டு விட்டு வராதீர்கள். அவற்றில் கடல்வாழ் உயிரினங்கள் சிக்கிக் கொள்ளலாம்.

514

4. கடற்கரையை பராமரியுங்கள்


உலகின் பாதி கடல் ஆமைகள் பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளை தற்செயலாக சாப்பிடுவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். கடற்கரையில் பொம்மைகளையோ, குப்பைகளையோ, பிளாஸ்டிக்குகளையோ போடாமல் கடலையும், கடற்கரையையும் சுத்தமாக வைத்திருங்கள்.

614

5. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும்


ஒவ்வொரு ஆண்டும் எட்டு மில்லியன் டன் பிளாஸ்டிக் மாசுபாடு கடலில் வந்து சேர்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே, மீண்டும் நிரப்பக்கூடிய தண்ணீர் பாட்டிலை பயன்படுத்தவும். சாண்ட்விச்சை துணி அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய டப்பாக்களில் வைக்கவும். பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட சோப்புகளுக்கு பதிலாக பார் சோப்புகளை பயன்படுத்தவும்.

714

6. குப்பை கிளப்


பள்ளியில் உங்கள் கழிவுகளை குறைக்க உங்கள் வகுப்பறையில் ஒரு கிளப்பை உருவாக்குங்கள். ஒவ்வொரு வாரமும் தூக்கி எறியப்படும் குப்பைகளை கண்காணித்து, அந்த பொருட்களைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்.

814

7. குப்பை துருப்புகள்


சமூக தூய்மைப்படுத்தலில் பங்கேற்கவும். நிகழ்வுகளை நடத்தும் குழுக்கள் சில சமயங்களில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை எடைக்கு போடுகின்றன. இது குப்பை பயன்பாட்டை மக்கள் குறைப்பதை ஊக்குவிக்கும் சட்டங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்க தலைவர்களுக்கு உதவுகிறது.

914

8. மறுசுழற்சி


அமெரிக்காவில் உள்ள மக்கள் தங்கள் கழிவுகளில் 35 சதவீதத்தை மட்டுமே மறுசுழற்சி செய்கிறார்கள். எனவே உங்களால் முடிந்ததை மறுசுழற்சி செய்யுங்கள். உங்கள் வகுப்பறையில் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை உருவாக்கும் திட்டங்களை பற்றி பேசலாம்.

1014

9. வணிகத்தில் பங்கெடுங்கள்


உங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம் கடையில் பிளாஸ்டிக் ஸ்பூன்கள் பயன்படுத்தப்படுகிறதா? பிளாஸ்டிக் அல்லாதவற்றிற்கு மாறுவது பற்றி உரிமையாளரிடம் நீங்கள் பேச முயற்சிக்கலாம். பிளாஸ்டிக் அல்லாத வேறு சில வகையான கரண்டிகளை உபயோகப்படுத்தும் யோசனையை அவருக்கு நீங்கள் வழங்கலாம்.

1114

10. பிறந்தநாள் கொண்டாட்டங்கள்


பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்களால் குப்பை பைகளை நிரப்பாதீர்கள். அதற்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை கொண்டு ட்ரீட் கொடுங்கள். உள்ளூர் பேக்கரிக்கு அழைத்து செல்லுங்கள்.

1214

11. ஸ்ட்ரா விழிப்புணர்வு


அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்துகின்றனர் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். கடலை சுத்தம் செய்யும் போது அதிகமாக கிடைக்கும் பிளாஸ்டிக் குப்பைகளில் முதல் 10 இடங்களில் ஸ்ட்ராக்களே உள்ளன. எனவே, மீண்டும் பயன்படுத்தக்கூடிய உலோக ஸ்ட்ராக்கள் அல்லது காகித ஸ்ட்ராக்களை பயன்படுத்தலாம்.

1314

12. பூச்சி நண்பர்கள்


பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் தயாரிக்கப்படும் உணவு மற்றும் உடைகளை வாங்க உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள். பூச்சிகளைக் கொல்ல பயிர்களில் தெளிக்கப்பட்ட ரசாயனங்களால் பிரச்சினை ஏற்படுகிறது. தேனீக்கள் போன்றே பூச்சிக்கொல்லிகளும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

1414

13. ஷாப்பிங்கில் கவனம் தேவை


உங்கள் வீட்டிற்கு அனுப்பப்படும் நீங்கள் வாங்கிய பொருட்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் மூடப்பட்டிருக்கும். கடையில் வாங்கும் பொம்மைகளும் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை. எனவே, எதை வாங்கலாம்; எதனை வாங்கத் தேவையில்லை என்று யோசியுங்கள்

About the Author

MP
Manikanda Prabu

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved