பாகிஸ்தானை போல் இந்தியாவிலும் ரயில் கடத்தப்பட்டதா? எப்போது? எங்கு நடந்தது?
பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் இந்தியாவிலும் ஒரு ரயில் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

Train Hijacked In India: பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA)என்ற அமைப்பு கடத்தியது. ரயிலில் இருந்த சுமார் 450க்கும் மேற்பட்ட பயணிகள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கரவாத அமைப்பினருடன் சண்டையிட்டு பயணிகளை மீட்டனர்.
Train Hijacked
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவிலும் இதேபோல் ஒரு ரயில் கடத்தப்பட்டு இருந்தது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவின் முதல் ரயில் கடத்தல் சம்பவம் பிப்ரவரி 6ம் தேதி 2013ம் ஆண்டு அன்று சத்தீஸ்கரின் துர்க்கில் நடந்தது. குற்றவாளிகள் ஜன் சதாப்தி ரயில் ஓட்டுநரையும் பயணிகளையும் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.
முடிவுக்கு வந்தது பாகிஸ்தான் ரயில் முற்றுகை: 346 பயணிகளை பத்திரமாக மீட்ட இராணுவம்!
Train Hijacked In India
அந்தக் கடத்தல் கும்பல், ஓட்டுநர் மற்றும் பிற ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து, ரயிலை வேறு நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு மிரட்டினார்கள். தனது தந்தை உபேந்திராவை விடுவிப்பதற்காக, ஒரு பிரபல ரவுடி கும்பலின் மகனால் ரயில் கடத்தப்பட்டது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட உபேந்திராவின் மகன் பிரிதம் சிங் என்கிற ராஜேஷ், கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த ரயில் கடத்தலை மேற்கொண்டார்.
அதாவது பல்வேறு வழக்குகளில் உபேந்திரா சிங் பிலாஸ்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு குற்றவியல் வழக்கு விசாரணைக்காக உபேந்திரா துர்க் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற விசாரணை முடிந்ததும், போலீசார் உபேந்திராவை அதே ரயிலில் பிலாஸ்பூருக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
Jan Sathapathi Express
உபேந்திராவை விடுவிக்க, அவரது மகன் பிரிதம் சிங், துர்க் மற்றும் ராய்கர் இடையே ஓடும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸை ஒரு கும்பலுடன் கடத்திச் சென்றார். ராய்ப்பூரை ஒட்டியுள்ள கும்ஹாரி ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்திய கடத்தல் கும்பல் உபேந்திரா சிங்குவையும் அழைத்து அங்கு இருந்து தப்பிச் சென்றது.
தந்தையை அழைத்துச் செல்வதே ஒரே நோக்கம் என்பதால் ரயிலை கடத்திய பிரிதம் சிங்கும், அந்த கும்பலும் ஓட்டுரையும், மற்ற பயணிகளையும் ஏதும் செய்யவில்லை. இந்த ரயில் கடத்தல் சம்பவம் 2013ம் ஆண்டு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ரயில்களில் வழங்கப்படும் உணவு! மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்! பயணிகளுக்கு இனி கவலையில்லை!