MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Rangaraj Pandey : பாண்டே சொந்த ஊர் எம்.எல்.ஏ பற்றி அதிர்ச்சி தகவல்..! அவர் படிப்பு.. வேலை பற்றி தெரியுமா?

Rangaraj Pandey : பாண்டே சொந்த ஊர் எம்.எல்.ஏ பற்றி அதிர்ச்சி தகவல்..! அவர் படிப்பு.. வேலை பற்றி தெரியுமா?

படித்த, அனுபவமுள்ள வேட்பாளர்களை நிறுத்தி பீகார் தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ் குமார் நிறுத்தி புரட்சி செய்துள்ளனர். ரங்கராஜ் பாண்டே வட மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத புதிய தகவல் ஆகும்.

2 Min read
Author : Raghupati R
| Updated : Nov 16 2025, 09:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரங்கராஜ் பாண்டே
Image Credit : Google

ரங்கராஜ் பாண்டே

தமிழகத்தின் பிரபலமான செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் பணி புரிந்து தற்போது தனது சொந்த YouTube சேனலை நடத்தி வருகிறார் ரங்கராஜ் பாண்டே.  பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில். ஆனால் அவரது பூர்வீகம் பீகார் மாநிலத்தின் பக்சர் மாவட்டம் ஆகும். பக்சர் என்பது பீகாரின் ஒரு முக்கிய நகராட்சிப் பகுதி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பீகார் தேர்தலில் பாஜக வெற்றி
Image Credit : Google

பீகார் தேர்தலில் பாஜக வெற்றி

இது பீகாரின் எல்லைப்பகுதியிலும், உத்தரப் பிரதேச எல்லைக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது. பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெறும் வாரணாசி (காசி) நகரில் இருந்து முகல் சராய் வழியாகச் சென்றால், வெறும் ஒரு மணி நேரத்தில் பக்சரை அடையலாம். அந்த அளவுக்கு உத்தரப் பிரதேசத்திற்கு நெருக்கமாக இருக்கும் பகுதிதான் பக்சர். ஹிந்தி மாநிலமான பீகாரின் இந்தப் பகுதியில் போஜ்புரி தான் பெரிதும் பேசப்படும் மொழியாகும். தற்போது நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தல் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

35
பக்சர் சட்டமன்றத் தொகுதி
Image Credit : anand mishra facebook

பக்சர் சட்டமன்றத் தொகுதி

அதில் முக்கியமாக, அலிகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல பாடகி மைத்திலி தாக்கூர், கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாஜக எம்எல்ஏ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்பெல்லாம் இந்தியாவில் அதிக குற்ற வழக்குகள் மற்றும் குற்றவாளிகள் போட்டியிடும் மாநிலம் என்ற பெயர் பீகாருக்கு இருந்தது. ஆனால் அந்த நிலைமை தற்போது மிக வேகமாக மாறி வருகிறது. இதன் அடிப்படையில், பக்சர் சட்டமன்றத் தொகுதியின் புதிய MLA ஆக ஆனந்த் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

45
ஆனந்த் மிஸ்ரா யார்?
Image Credit : Google

ஆனந்த் மிஸ்ரா யார்?

இந்த ஆனந்த் மிஸ்ரா, இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமான IIT யில் படித்து பட்டம் பெற்றவர். பின்னர் அவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக மாறினார். அவர் அசாம் காவல் துறையில் முன்னாள் ADGP ஆகவும், CRPF, CISF, ITBP போன்ற மத்திய பாதுகாப்பு படைகளில் மிக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். இந்த தேர்தலில் பக்சர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் மிஸ்ரா, காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் குமார் திவாரி (முன்னா திவாரி)யை 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி வித்தியாசம் பெற்றார்.

55
பீகார் தேர்தல்
Image Credit : Google

பீகார் தேர்தல்

இவரைப் போலவே இம்முறை பீகாரில் பல படித்த பட்டதாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். பின்தங்கிய மாநிலம் என்ற பழைய பெயரை நீக்கி, பீகாரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் நோக்கில், படித்த, தகுதியான, அனுபவமுள்ள வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெறச் செய்ததாக பீகார் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பீகார்
தமிழ்நாடு
இந்தியா
அரசியல்
பிஜேபி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
விமானத்தை விட வேகமாக சென்னை டூ பெங்களூரு: 359 கி.மீ தூரத்தை 73 நிமிடங்களில் கடக்கும் புதிய புல்லட் ரயில் திட்டம்!
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
தங்கத்தையே சுரண்டி எடுத்த மோசடிக்காரர்கள்! நாணயத்தின் ஓரத்தில் கோடுகள் வந்தது ஏன் தெரியுமா?
Related Stories
Recommended image1
2 துணை முதல்வர்கள்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் நிதிஷ்குமார்.. பீகார் முதல்வர் ரேஸில் முந்துவது யார்?
Recommended image2
என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை.. ஜகா வாங்கிய அமைச்சர் கே.என் நேரு.. மீண்டும் எழுந்த சர்ச்சை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved