ஒரே இடத்தில் வலது பக்கம் ஒரு ரயில்வே ஸ்டேஷன்.! இடது பக்கம் ஒரு ஸ்டேஷன்- விசித்தரமான ஊர் எங்கே தெரியுமா.?
இந்திய ரயில்வேயில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதில் ஒன்று, ஒரே நடைமேடை, ஆனால் இரண்டு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆமாம், நடைமேடையின் இடது பக்கம் நின்றால் ஒரு நிலையம், வலது பக்கம் நின்றால் மற்றொரு நிலையம்.
இந்திய ரயில்வே நிலையங்களில் பல விசேஷங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல பாஸ்போர்ட் தேவை, விசித்திரமான பெயர்கள் கொண்ட ரயில் நிலையங்கள், அதிக பிளாட்பாரங்களை கொண்ட ரயில் நிலையம் என பல அதிசயங்கள் உள்ளன. இதில் இந்த நிலையம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பொதுவாக ரயில்வே நடைமேடையில் இரண்டு பக்கங்களிலும் நின்றாலும் ஒரே நிலையம்தான். அதாவது ரயில் செல்லும் மற்றும் வரும் இரண்டு பக்கங்களும் ஒரே நிலையம். ஆனால் இங்கே ஒரே இடம், ஒரே நடைமேடை. ஆனால் இரண்டு ரயில் நிலையங்கள். ரயில் நடைமேடையின் இரண்டு பக்கங்களும் வெவ்வேறு நிலையங்கள் உள்ளது.
இது மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு ரயில் நிலையம். இங்கே ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் நின்றால் ஸ்ரீராம்பூர் ரயில் நிலையம், பாதையை கடந்து மறுபுறம் நின்றால் பேலப்பூர் ரயில் நிலையம். இது ஒரே நடைமேடை, ஆனால் நடுவில் செல்லும் ரயில் பாதை வெவ்வேறு நிலையங்களாக பிரித்துள்ளது.
இங்கே எந்த நிலையத்திற்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்ற குழப்பம் பல முறை ரயில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. காரணம் இரண்டு நிலையங்களுக்கும் ஒரே தூரம், ஒரே டிக்கெட் கட்டணம். இறங்கும்போது அல்லது ஏறும்போது ரயில் எந்த பக்கத்தில் இருந்து வருகிறது என்பதைப் பொறுத்தது.
இரண்டு பக்கங்களிலும் வெவ்வேறு நிலையங்களின் பெயர் பலகைகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் புவியியல் பகுதியின் பிரிவினையாகும். ரயில் பாதையின் ஒரு பக்கம் ஸ்ரீராம்பூர் பகுதி, மறுபுறம் பேலப்பூர். இதன் எல்லைக் கோட்டிலிருந்து ரயில் பாதை செல்கிறது. எனவே இரண்டு வெவ்வேறு ரயில் நிலையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேபோல் மகாராஷ்டிராவின் நவாப்பூர் ரயில் நிலையத்திலும் ஒரு சிறப்பு உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் ஒரு பகுதி மகாராஷ்டிராவிற்கும், மறு பகுதி குஜராத்திற்கும் சொந்தமானது. இந்த நிலையத்தில் ரயில் அறிவிப்புகள், இந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் செய்யப்படுகின்றன.