MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பேமிலி டூர் செல்ல கண்கவர் கடற்கரை நகரங்கள்! இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

பேமிலி டூர் செல்ல கண்கவர் கடற்கரை நகரங்கள்! இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

அழகிய இயற்கைக் காட்சிகளுடன் பிரமிக்க வைக்கும் கடலோர நகரங்களைக் கொண்டது இந்தியா. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கின்றன.

1 Min read
SG Balan
Published : Oct 07 2024, 03:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Alleppey (Alappuzha)

Alleppey (Alappuzha)

ஆலப்புழா, கேரளா: ஆலப்புழா கிழக்கின் வெனிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இங்குள்ள உப்பங்கழிகள், படகுப் பயணங்கள் மற்றும் மராரி கடற்கரை உள்ளிட்டவை உலக அளவில் புகழ்பெற்றவை.

210
Rameswaram

Rameswaram

ராமேஸ்வரம், தமிழ்நாடு: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், பாம்பன் பாலம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலுக்கு பெயர் பெற்ற அழகிய கடற்கரை நகரமாகும்.

310
Gokarna

Gokarna

கோகர்ணா, கர்நாடகா: கோகர்ணா நகரம் ஓம் பீச் மற்றும் குட்லே பீச் போன்ற அதிகம் அறியப்படாத, ஆனால் அழகான கடற்கரைகளைக் கொண்டிருக்கிறது.

410
Kovalam

Kovalam

கோவளம், கேரளா: கோவளம் தென்னிந்தியாவில் உள்ள இந்தியாவின் மிக முக்கியமான கடற்கரை நகரங்களில் ஒன்றாகும். லைட்ஹவுஸ் பீச், ஹவா பீச் மற்றும் சமுத்ரா பீச் ஆகிய மூன்று அழகிய கடற்கரைகள் இங்கு உள்ளன.

510
Mandvi

Mandvi

மாண்டவி, குஜராத்: மாண்ட்வி அழகான கடற்கரையுடன் விஜய் விலாஸ் அரண்மனையின் கட்டிடக்கலைக்காகவும் புகழ் பெற்றது. இங்குள்ள மாண்ட்வி கடற்கரை மிகவும் பிரபலமானது. கடற்கரை பிரியர்களைத் தொடர்ந்து ஈர்க்கிறது.

610
Varkala

Varkala

வர்கலா, கேரளா: வர்கலா கேரளாவின் மற்றொரு அழகிய கடற்கரை நகரமாகும். அரபிக்கடலின் மனதைக் கவரும் காட்சிகளை கொண்ட எழில்மிகு வர்கலா கடற்கரை தென்னிந்தியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும்.

710
Kanyakumari

Kanyakumari

கன்னியாகுமரி, தமிழ்நாடு: கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடியில் உள்ளது. இந்தியாவிலேயே கன்னியாகுமரிதான் சூரிய அஸ்தமனத்தைக் காண மிகச் சிறப்பான இடமாக இருக்கும். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் காட்சியையும் காணலாம். மகேந்திரகிரி மலையில் மலையேற்றமும் செய்யலாம்.

810
Puducherry

Puducherry

புதுச்சேரி: இந்தியாவில் பார்க்க வேண்டிய மிக அழகான கடற்கரை நகரங்களில் ஒன்று புதுச்சேரி. இந்த நகரம் பிரெஞ்சு கட்டிடக்கலை, அழகான கஃபேக்களுக்குப் பெயர் பெற்றது. பாரடைஸ் பீச் மற்றும் ப்ரோமனேட் பீச் போன்ற அழகிய கடற்கரைகள் உள்ளன.

910
Diu

Diu

டையூ, குஜராத் அருகில்: டையூ ஒரு அமைதியான அழகான தீவு. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத தீவு. நாகோவா பீச் மற்றும் கோக்லா பீச் போன்ற கடற்கரைகள் நீச்சலுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றன.

1010
Chennai, Tamilnadu

Chennai, Tamilnadu

சென்னை வங்காள விரிகுடாவை ஒட்டிய புமெரினா கடற்ரை, பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவற்றைக் கொண்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் உள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved