இனி டோல்கேட்டில் கட்டணம் இல்லாமல் போகலாம்.! புதிய விதி அறிமுகம்- எந்த எந்த வாகனங்களுக்கு தெரியுமா.?
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டண வசூல் முறையில் புதிய மாற்றம். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் வாகனங்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெறு வருகிறது. அந்த வகையில் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது. சாலைகள் அமைப்பது, பராமரிப்பது என பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சாலையிலும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 4 சாலை, 8சாலை என விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து சாலை அமைக்கப்பட்டதற்கு பிறகு அந்த சாலையை பராமரிக்கும் பணியை தனியார் அமைப்புகளுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை வழங்குகிறது. குறிப்பிட்ட தூரத்தில் டோல் கேட்கள் அமைக்கப்படுகிறது. அப்போது கார், பேருந்து, லாரி போன்றவற்றிக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் 55 ரூபாயும் ஒரு சில இடங்களில் 70 ரூபாய் வரையும் ஒருமுறை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதமும் மாற்றப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரை தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதனையடுத்து மீதமுள்ள சுங்கச்சாவடிக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட்டது.
சுங்கச்சாவடி- புதிய விதி அமல்
இந்தநிலையில் சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையில், செயற்கைக்கோள் வாயிலாக பயண தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லும் வகையில் பாஸ்ட் டிராக் நடைமுறை செயல்படுத்தப்பட்டது.
சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கியது. மேலும் லோட்கேட் ஊழியர்களிடம் கட்டணம் செலுத்துவதில் வாக்குவாதமும் தவிர்க்கும் நிலை உருவானது. இந்தநிலையில் புதிய விதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான, 'குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்' மூலம் ஜி.என்.எஸ்.எஸ். முறை நடைமுறைக்கு தொடர்பாக புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
20 கிலோ மீட்டருக்கு கட்டணமில்லா பயணம்
இதன்படி, வாகனங்களில் ஆன்-போர்டு யூனிட் பொருத்தப்படவுள்ளது. இதனால் அந்த வாகனங்கள் செல்லும் தூரம் கணக்கிட முடியும். சுங்க கட்டண சாலைகளில் முதல் 20 கிலோ மீட்டருக்கு பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் தினமும் 20 கிலோமீட்டர் வரை கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படும் வகையில் புதிய உத்தரவை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வாகனம் 20 கிலோ மீட்டர் தாண்டி பயணிக்கும் துாரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, பாஸ்டேக் போலவே, வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பயண தூரத்திற்கு ஏற்ப கட்டணம்
இந்த ஆன் போர்டு யூனிட் கருவி வாகனங்களில் பொருத்த அரசு இணையதளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கருவியானது தற்போது போக்குவரத்தில் உள்ள வாகனங்களில் புதிதாக வாங்கி பொருத்த வேண்டும். மேலும் புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்களில் தயாரிப்பு நிறுவனங்களே பொருத்தி விற்பனை செய்யும் என கூறப்பகிறது. செயற்கைகோள் தொழில் நுட்பத்தில் இணைக்கப்படும் இந்த கருவி வாகனம் பயணம் செய்யும் தூரத்தை பொறுத்து கட்டணத்தை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் .