மோடிக்கு வரவேற்பு கொடுத்த பல்லாயிர கணக்கான இஸ்லாமிய பெண்கள்..! கேலரி
பிரதமர் மோடிக்கு பல்லாயிர கணக்கான முஸ்லீம் பெண்கள் ஒன்று கூடி, அவருக்கு உச்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களும், பாஜவை சேர்ந்த உறுப்பினர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
புதிதாக புதுப்பிக்கப்பட்ட ராணி கம்லாபதி ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் தலைநகருக்கு திங்கள்கிழமை (நேற்று) மத்தியப் பிரதேசம் சென்றிருந்தார். அப்போது அவருக்கு புர்கா அணிந்த ஏராளமான இஸ்லாமிய, பெண்கள் சாலைகளில் வரிசையாக நின்று பிரதமரை வரவேற்றனர்.
தங்களின் துயரங்களைப் புரிந்து கொண்டு, முத்தலாக்கை ரத்து செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே தாங்கள் வந்திருப்பதாக அந்த கூட்டத்தில் இருந்த பல இஸ்லாமிய பெண்கள் கூறினர்.
அதே போல் ‘முத்தலாக் ஒழிப்புக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வந்ததற்கு நன்றி மோடி ஜி’ என்று பிரதமர் மோடியின் முகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
தற்போது போபால் பகுதியை சேர்ந்த பெண்களும் - ஆண்களும் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கும் தருணம் வீடியோவாகவும், புகைப்படமாகவும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கோவை தெற்கு தொகுதி பாஜக சட்ட மன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன் உட்பட பலர் இந்த புகைப்படங்களை பகிர்ந்தும் உள்ளனர்.
இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் சாலையின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டுருள்ளனர். மேலும் பிரதமர் இறங்கும் இடம் வந்ததும், அவர் கார் மீது மக்கள் மலர் தூவி, வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
பிரதமர் மோடியும் தனக்கு ஆதரவு கொடுக்கும் பெண்களைநோக்கி கை அசைத்து... அவர்களைப் பார்த்து புன்னகைத்தார். பிரதமர் வருகையால் போபால் நகரின் தெருக்கள் தேசியக் கொடி மற்றும் பாரதிய ஜனதாக் கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நேற்றைய தினம் திறந்து வைத்துள்ள ராணி கமலாபதி ரயில் நிலையம், இந்தியாவின் முதல் ISO தரச்சான்றிதழ் பெற்ற இரயில் நிலையம் ஆகும். நாட்டின் முதல் PPP ( Petition Processing Portal) மாதிரி வசதிகளை கொண்ட ரயில் நிலையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் விமான நிலையத்தில் இருந்த வசதிகள் இப்போது ரயில் நிலையத்திலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.