MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Train : இந்தியாவில் ரயில்வே ஸ்டேஷனே இல்லாத ஒரே ஒரு மாநிலம் எது தெரியுமா?

Train : இந்தியாவில் ரயில்வே ஸ்டேஷனே இல்லாத ஒரே ஒரு மாநிலம் எது தெரியுமா?

State Which has No Railway Stations : இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க் ஆக ரயில்வே இருந்து வரும் நிலையில், ரயில்வே ஸ்டேஷனே இல்லாமல் ஒரு மாநிலம் இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 21 2026, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Indian state without railway
Image Credit : X

Indian state without railway

நூறு வருஷத்துக்கும் மேல வரலாறு, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் ரயில் பாதை, தினமும் லட்சக்கணக்கான பயணிகள்... இவ்வளவு பெரிய இந்தியன் ரயில்வே நெட்வொர்க், இன்னும் ஒரு மாநிலத்துக்குள்ள நுழையவே இல்லை. உலகோட டாப் 5 பெரிய ரயில்வே நெட்வொர்க்குகள்ல இந்தியாவும் ஒண்ணு. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்து நாமதான். நம்மகிட்ட கிட்டத்தட்ட 70,000 கி.மீ. நீளத்துக்கு ரயில் பாதை இருக்கு. தினமும் 20,000-க்கும் அதிகமான ரயில்கள் ஓடுது. ஆனா, இவ்வளவு பெரிய நெட்வொர்க் இன்னும் ஒரு மாநிலத்துல கால் பதிக்கல. அது ஏன், எந்த மாநிலம்னு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரயில் நிலையம் இல்லாத மாநிலம் எது?
Image Credit : gemini

ரயில் நிலையம் இல்லாத மாநிலம் எது?

ஒரு மாநிலத்தோட வளர்ச்சிக்கு போக்குவரத்து ரொம்ப முக்கியம். ஆனா, வடகிழக்கு மாநிலமான சிக்கிம்ல இன்னைக்கு வரைக்கும் ரயில் போக்குவரத்து இல்லை. உயரமான இமயமலை, ஆழமான பள்ளத்தாக்கு, அடிக்கடி நிலநடுக்கம், கனமழையால் நிலச்சரிவுனு பல சவால்கள் இருக்கறதால, இங்க ரயில் பாதை அமைக்க முடியல. இதனால, ஒரு ரயில் நிலையம் கூட இல்லாத மாநிலமா சிக்கிம் இருக்கு. இந்தியாவில் சிக்கிம் மாதிரி, உலகத்துலயும் ரயில் நெட்வொர்க்கே இல்லாத நாடுகள் இருக்கு. நம்ம பக்கத்து நாடான பூட்டான்ல ரயில் கிடையாது. அதேபோல குவைத், மாலத்தீவுகள், லிபியா, ஏமன், தைமூர், ஐஸ்லாந்து, அன்டோரா போன்ற நாடுகளிலும் ரயில் போக்குவரத்து இல்லை.

34
விரைவில் வருகிறது ரயில் பாதை
Image Credit : social media

விரைவில் வருகிறது ரயில் பாதை

சிக்கிம் மாநிலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து சிக்கிமின் ரங்போ வரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 7 ஆயிரத்து 877 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2027-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்வே வழித்தடத்தில் மொத்தம் 14 சுரங்கப் பாதைகள் உள்ளதாம். அதுமட்டுமின்றி 23 பாலங்களும் அடங்குமாம். தற்போது மேற்கு வங்கத்தில் இருந்து சிக்கிமில் உள்ள ரங்போ செல்ல சாலை மார்கமாக 5 மணிநேரம் ஆகும். இந்த ரயில் பாதை தொடங்கப்பட்டால், அது 2 மணிநேரமாக குறையும் என கூறப்படுகிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் சிக்கிம் மாநிலத்தின் முதல் ரயில்பாதையாக இது இருக்கும்.

44
இந்திய ரயில்வே சுவாரஸ்யங்கள்
Image Credit : Gemini AI

இந்திய ரயில்வே சுவாரஸ்யங்கள்

இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் உத்தரப் பிரதேசத்தில்தான் இருக்கு. இங்க 9,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்துல ரயில் பாதைகள் இருக்கு. லக்னோ, கான்பூர், காசியாபாத், கோரக்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ், ஜான்சி, ஆக்ரானு பல முக்கிய ரயில் நிலையங்கள் இங்க இருக்கு. இது இந்திய ரயில்வேயின் முதுகெலும்புனே சொல்லலாம். இந்தியாவில் பெயரே இல்லாத ஒரு ரயில் நிலையம் இருக்கு தெரியுமா? இது மேற்கு வங்க மாநிலம் வர்தமான் மாவட்டத்துல இருக்கு. 2008-ல் கட்டப்பட்ட இந்த ஸ்டேஷன், ரெய்னாகர், ரெய்னாங்குற ரெண்டு கிராமங்களுக்கு நடுவுல இருக்கு. முதல்ல 'ரெய்னாகர் ஸ்டேஷன்'னு பேர் வெச்சாங்க. ஆனா, ரெய்னா கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிச்சதால, ரயில்வே நிர்வாகம் அந்தப் பெயர் பலகையை எடுத்துட்டாங்க. அதிலிருந்து இது பெயர் இல்லாத ரயில் நிலையமா இருக்கு.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொடர்வண்டிப் போக்குவரத்து
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Bonus : ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
Ration Cardholders: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 தீபாவளி பரிசு! யாருக்கு? தமிழகத்தில் எகிறும் எதிர்பார்ப்பு!
Recommended image3
Waiting List Over 100: வெயிட்டிங் லிஸ்ட் 100-ஐ தாண்டிவிட்டதா? IRCTC-ல் இந்த ட்ரிக் டிரை பண்ணுங்க..
Related Stories
Recommended image1
Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்
Recommended image2
வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் மட்டும் போதாது.. ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved