போனில் ஆதார், பான் வைத்திருக்கிறீர்களா? உஷார்.!! நிபுணர்கள் எச்சரிக்கை!
உங்கள் ஸ்மார்ட்போனில் ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களின் படங்களை சேமிப்பது சைபர் மோசடிகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மொபைல் பாதுகாப்பு
இப்போதெல்லாம் வங்கி கணக்கு மோசடி, ஏடிஎம் பண மோசடி போன்ற சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில் நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு என்னவென்றால், நமது போனில் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாளங்கள் ஆவணங்களின் படங்களை நேரடியாக சேமித்துவைப்பதே.
ஆதார் கார்டு
டிஜிட்டல் இந்தியா காலத்தில் பெரும்பாலானோர் இதை செய்வது இயல்பாகிவிட்டது. ஆனால், சைபர் நிபுணர்கள் இதை மிகப்பெரிய அபாயமாகக் குறிப்பிடுகின்றனர். நிபுணர் ரக்ஷித் டாண்டனின் கூற்றுப்படி, இப்படியான ஆவணங்கள் போனால் மோசடி செய்பவர்கள் வங்கிக் கணக்கை அணுகவும், போலி KYC சரிபார்ப்பு செய்ய, சிம் ஸ்வாப் மற்றும் டிஜிட்டல் கடன் மோசடிகளையும் நடத்த முடியும்.
பான் கார்டு
“போனில் ஆதார், பான் படங்களை வைத்திருப்பது பூட்டப்படாத பையில் வைத்து நடப்பது போன்றது” என்று டாண்டன் எச்சரிக்கிறார். அதாவது, நம்மை அறியாமலேயே நமது தனிப்பட்ட தகவல்கள் குற்றவாளிகளின் கைகளில் சிக்கக்கூடும். இதை பாதுகாப்பான மாற்றாக அரசு வழங்கும் DigiLocker பயன்பாட்டை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் சேமிப்பிடத்தை வழங்குவதால், ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
டிஜிலாக்கர்
அதேசமயம், போனின் பாதுகாப்பு அமைப்புகளைப் புதுப்பித்தல், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துதல், தேவையற்ற ஆப் அனுமதிகளை கட்டுப்படுத்துதல் தவிர்க்க முடியாத முன்னெச்சரிக்கைகள் என தெரியவந்துள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் இந்த காலத்தில், நமது முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். எளிதாக பயன்படுத்துவதற்காக போனில் சேமிப்பது, பெரும் இழப்புக்கு வழிவகுக்கக் கூடும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.