கும்பமேளா குறித்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய கடிதம் ரூ.4 கோடிக்கு ஏலம்! என்ன எழுதி உள்ளார் தெரியுமா?
மகா கும்பமேளா விழாவிற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் வர எழுதிய கடிதம் ₹4.32 கோடிக்கு ஏலம் போனது. 1974ல் தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கும்பமேளாவில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
Maha Kumbhmela
,12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவான மகா கும்பமேளா விழா நேற்று முன் தினம் கோலாகலமாக தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். மகா கும்பமேளாவின் போது திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கும்பமே
Maha Kumbhmela
இந்த நிலையில் மகா கும்பமேளாவை பார்க்க வேண்டும் என்று மறைந்த ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய கடிதம் சமீபத்தில் ₹4.32 கோடிக்கு ஏலம் போனது. 1974-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த கும்பமேளாவிற்கு இந்தியா வர விருப்பம் தெரிவித்து, தனது பால்ய நண்பர் டிம் பிரவுனுக்கு எழுதப்பட்டது.
Maha Kumbhmela
கடிதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?
டிம்,
உங்கள் கடிதத்தை நான் பல முறை படித்திருக்கிறேன்
என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
பல காலைகள் வந்து போயின, மக்கள் வந்து போயின
நான் நேசித்தேன், பல முறை அழுதிருக்கிறேன்.
நான் இப்போது லாஸ் கேடோஸ் மற்றும் சாண்டா குரூஸுக்கு இடையேயான மலைகளில் ஒரு பண்ணையில் வசிக்கிறேன். ஏப்ரல் மாதம் தொடங்கும் கும்ப மேளாவிற்கு இந்தியா செல்ல விரும்புகிறேன். மார்ச் மாதத்தில் நான் புறப்படுவேன், இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. நீங்கள் விரும்பினால், நீங்கள் வரும்போது நான் இன்னும் இங்கேயே இருக்கிறேன், நாம் ஒன்றாக மலைகளில் மேலே வந்து உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் என்னிடம் சொல்லலாம், அது உங்கள் கடிதத்திலிருந்து எனக்கு முழுமையாகப் புரியவில்லை. மற்றொரு அறையில் நெருப்பு எரிகிறது, எனக்கு இங்கே குளிர் அதிகமாக இருக்கிறது. எங்கிருந்து தொடங்குவது என்று கூட எனக்குத் தெரியவில்லை என்று கூறி முடிக்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Maha Kumbhmela
கும்பமேளாவில் ஸ்டீவ் ஜாப்ஸ்.ஒருபோதும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவரது மனைவி லாரன் ஜாப்ஸ் உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜில் நடைபெறும் மஹாகும்பமேளாவில் கலந்து கொள்ள வந்துள்ளார். ஆன்மீகத் தலைவர் வியாசநந்த் கிரி மகாராஜுக்கு 'பட்டாபிஷேகம்' செய்யும் சடங்கு நிகழ்வின் போது அவருக்கு "கமலா" என்ற இந்து பெயரும் வழங்கப்பட்டது. நீண்ட வெள்ளை உடை மற்றும் ஆரஞ்சு நிற சால்வை அணிந்த அவர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார். 2025 மகா கும்பத்தில் தனது இரண்டாவது நாளில் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Maha Kumbhmela
ஆன்மீகத் தலைவர் சுவாமி கைலாசநந்த் கிரி, "லாரன் ஜாப்ஸ் புனித நீராடுவதற்கான சடங்கில் பங்கேற்பார்" என்று தெரிவித்துள்ளார்.. மேலும் அவரின் பதிவில் “ இருப்பினும், அவருக்கு சில ஒவ்வாமைகள் உள்ளன. அவர் இவ்வளவு நெரிசலான இடத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. அவர் மிகவும் எளிமையானவர். பூஜையின் போது அவர் எங்களுடன் தங்கினார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.