வானத்தில் ஸ்மைலியை உருவாக்கும் கோள்கள்! ஏப்ரல் 25 இல் அரிய வானியல் நிகழ்வு!
ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை அதிகாலையில், வெள்ளி, சனி மற்றும் பிறை நிலவு இணைந்து வானில் ஸ்மைலி போன்ற ஒரு அரிய தோற்றத்தை உருவாக்கும். இந்த நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க முடியும், ஆனால் தொலைநோக்கி மூலம் பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.

Space, Smiley, Moon
வானத்தில் ஸ்மைலி:
ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை அதிகாலையில் நீங்கள் எழுந்திருந்தால், வானத்தில் ஸ்மைலி போன்ற ஒரு அரிய தோற்றத்தைக் காணலாம். இது வெள்ளி, சனி மற்றும் பிறை நிலவு அருகில் வருவதால் ஏற்படுகிறது என்று நாசா விளக்கியுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வின்போது மூன்றும் முக்கோண வடிவத்தில் ஒன்றாக இருக்கும் எனவும் நாசா கூறியுள்ளது.
எப்போது பார்க்கலாம்?
உள்ளூர் நேரப்படி காலை 5:30 மணியளவில், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு, வெள்ளி மற்றும் சனி கிழக்கு வானத்தில் பிறை நிலவுடன் இணையும். இது புன்னகைக்கும் முகம் போன்ற தோற்றத்தை உருவாக்கும். பிறை நிலவு புன்னகைக்கும் உதடுகளாகவும் இரண்டு கிரகங்களும் கண்களாகவும் தோன்றும். இந்த அரிய வானியல் நிகழ்வு சுமார் ஒரு மணிநேரம் மட்டுமே தெரியும். பின்னர் சூரிய வெளிச்சத்தில் வானம் பிரகாசமாகிவிடும் என்பதால் பார்ப்பது கடினம்.
Space, Smiley, Moon
தொலைநோக்கி தேவையா?
இந்த நிகழ்வைப் பார்க்க சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. வெள்ளி மற்றும் சனி இரண்டுமே வெறும் கண்ணால் பார்க்கும் அளவுக்குப் பிரகாசமாக இருக்கும். இருப்பினும், தொலைநோக்கி மூலம் பார்த்தால் இன்னும் தெளிவாகப் பார்க்கும் அனுபவத்தைப் பெறலாம். சந்திரனின் மேற்பரப்பு, கிரகங்களின் தோற்றத்தை நெருக்கமாகப் பார்க்க முடியும்.
Space, Smiley, Moon
எங்கே காணலாம்?
வானம் தெளிவாகவும், கிழக்கு அடிவானம் மேகமூட்டம் இல்லாமலும் இருந்தால், இந்த தனித்துவமான வானியல் நிகழ்வைக் காணலாம். சிறப்பான அனுபவத்தைப் பெற, கிழக்கு நோக்கி விசாலமான திறந்தவெளியில் இருந்து பார்க்கலாம்.
ஸ்மைலியை உருவாக்கும் முக்கோணத்திற்குக் கீழே அடிவானத்தில் தாழ்வாக அமைந்துள்ள புதன் கோளையும் பார்வையாளர்கள் காண முடியும். இருப்பினும் அந்தந்தப் பகுதியில் இருகுகம் நிலைமையைப் பொறுத்து புநன் கோளைப் பார்ப்பதும் பாதெரிவுநிலை மாறுபடலாம்.
இன்னொரு வானியல் நிகழ்வு:
ஸ்மைலி் நிகழ்வுக்கு முன்பு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதியில் உச்சத்தை அடையும் லிரிட் விண்கல் மழையைக் காணலாம். அதாவது அந்த நாட்களில் இருண்ட வானத்தில் மணிக்கு 15 விண்கற்கள் வரை பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.