- Home
- இந்தியா
- பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி
பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி
Government Employee: தெலங்கானாவில் பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15% பிடித்தம் செய்து, அதை பெற்றோரின் கணக்கில் செலுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள்
பெற்றோரை சரியாக கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளி திருமணம்
ஹைதராபாத் பிரஜா பவனில் பால பரோசா மற்றும் பிரணய் டே கேர் எனும் இரண்டு புதிய திட்டங்களை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள உபகரணங்களை வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டால் அந்த ஜோடிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அதே சமயத்தில் மாற்றுத் திறனாளியை திருமணம் செய்பவருக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும். அரசு பணியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்
மேலும் பேசிய முதல்வர் அரசு ஊழியர்கள் யாராவது தங்கள் பெற்றோரை கவனிக்கவில்லை என்றால் உங்களது சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அது நேரடியாக உங்களது பெற்றோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது உங்களுடைய பெற்றோர்களும் அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நான் நிச்சயமாக உறுதி செய்வேன்.
பெற்றோர்களின் வங்கி கணக்கில் வரவு
அரசு ஊழியர்களின் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டவுடன் அவர்களது பெற்றோர்களின் வங்கி கணக்கிலும் சம்பளத்தின் ஒரு பகுதி தானாகவே வரவு வைக்கப்படும். இதற்கான சட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக ஒரு குழுவை அமைக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.
போக்குவரத்து விதிமீறல்கள்
குடிபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகளில் போக்குவரத்து அபராத தள்ளுபடியை நீக்கவும், விதிமீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி சலான் பெறும் நபர்களுக்கு எந்தவித தள்ளுபடியும் வழங்க வேண்டாம். வாகனங்கள் பதிவு செய்யும்போதே அவற்றின் உரிமையாளர்களுடன் இணைக்கப்பட வேண்டும். ஆட்டோ-டெபிட் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் ஏதேனும் போக்குவரத்து விதிமீறல் ஏற்பட்டால், அபராதத் தொகை நேரடியாக வாகன உரிமையாளரின் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

