சினிமாவை மிஞ்சிய விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி! நடந்தது என்ன?
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் லாரி ஒன்று இரண்டு ஆட்டோக்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
சினிமாவை மிஞ்சிய விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி! நடந்தது என்ன?
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் தண்டவாள இரும்புகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் மாமுனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற இரண்டு ஆட்டோக்களை லாரியின் முந்தி செல்ல முயன்றது.
Telangana Accident
அப்போது எதிர்பாராத விதமாக லாரியில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததில் லாரியில் இருந்த இரும்புகள் ஆட்டோ மீது முழுவதுமாக சரிந்தது. இதில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இந்நிலையில் ஆட்டோவில் இருந்த கைக்குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 6 படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
Road Accident
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிரேன் உதவியுடன் நீண்ட நேரம் போராடி 7 பேரின் உடல்களை மீட்டனர். இதனையடுத்து மீட்கப்பட்ட 7 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் படுகாயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Warangal Accident
இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் போதையில் லாரியை ஓட்டுநர் வேகமாக ஓட்டிச் சென்றதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் போபாலை சேர்ந்ததவர்கள் என்பதும் சாலையோரம் கூடாராம் அமைத்து கூலி வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.