- Home
- இந்தியா
- ஆபரேஷன் சிந்தூர்! இந்தியர்களின் மனதில் இடம்பிடித்த பெண் சிங்கம்! யார் இந்த சோபியா குரேஷி?
ஆபரேஷன் சிந்தூர்! இந்தியர்களின் மனதில் இடம்பிடித்த பெண் சிங்கம்! யார் இந்த சோபியா குரேஷி?
பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் கர்னல் சோபியா குரேஷி. இவர் யார்? என்பது குறித்து பார்ப்போம்.

Who is colonel sophia qureshi: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி அழித்துள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றது குறித்து இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் கலந்துகொண்டு விளக்கம் கொடுத்தனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர்
இதில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி தகவல் கொடுத்த கர்னல் சோபியா குரேஷி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கர்னல் சோபியா குரேஷியின் கணவர் தாஜுதீன் பாகேவாடியும் ஒரு கர்னலாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் தாஜுதீன், பெல்காம் மாவட்டத்தின் கோகல் தாலுகாவில் உள்ள கொன்னூர் கிராமத்தில் வசிப்பவர். பெண் ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி பெல்காமின் மருமகள் என்பதை அறிந்ததும் கன்னடர்களும் பெருமைப்படுகிறார்கள். பன்னாட்டு இராணுவப் படையை வழிநடத்தும் முதல் இந்தியப் பெண் அதிகாரி என்ற பெருமையை சோபியா குரேஷி பெற்றுள்ளார்.
யார் இந்த சோபியா குரேஷி?
சோபியாவின் கணவர் தாஜுதீன் பெல்காம் மாவட்டம் கோகாக் தாலுகாவில் உள்ள கொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கணவன் மனைவி இருவரும் இந்திய ராணுவத்தில் கர்னல்களாக பணியாற்றுகிறார்கள். சோபியா குரேஷியின் கணவர் தாஜுதீன் பகேவாடியும் ஒரு கர்னலாக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையில் நுழைந்த தாஜுதீனும் சோபியாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கர்னல் சோபியா குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவைச் சேர்ந்தவர்.