MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • விவசாயிகளுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை.. தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கு.. உடனே இதை பண்ணுங்க

விவசாயிகளுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை.. தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கு.. உடனே இதை பண்ணுங்க

பிஎம் கிசான் திட்டத்தின் 22வது தவணைக்கு முன்னதாக, 14 மாநிலங்களில் புதிய பதிவுகளுக்கு விவசாயி ஐடி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஐடி இல்லாமல் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 05 2026, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிஎம் கிசான் 22வது தவணை
Image Credit : ChatGPT

பிஎம் கிசான் 22வது தவணை

பிஎம் கிசான் திட்டம் 22வது தவணை நெருங்கி வரும் நிலையில், விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் மாநில பதிவுப் பணிகள் தொடங்கியுள்ள சில புதிய பதிவுகளுக்கு விவசாயி ஐடி கட்டாயம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அடையாளம் இல்லாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதால், பல விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Image Credit : Getty

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தற்போது 14 மாநிலங்களில் பிஎம் கிசான் திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் விவசாயிகளுக்கு விவசாயிகளின் அடையாள அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்கள் அடங்கும். இந்த மாநிலங்களில் மட்டும் இதுவரை 7.67 கோடி விவசாயி ஐடி-க்கள் வழங்கப்பட்டுள்ளது அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் மேலும் மாநிலங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
கோடை காலத்தில் தினமும் ரூ.1,000 சம்பாதிக்கலாம்.. வெயில் அதிகமானா காசும் அதிகரிக்கும்
Related image2
தவெகவில் இருந்து விலகும் விஜயின் தளபதி.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. கட்சி என்ன ஆகப்போகுதோ.?
35
விவசாயி ஐடி
Image Credit : Getty

விவசாயி ஐடி

விவசாயி ஐடி என்பது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளம் ஆகும். இதில் விவசாயியின் பெயர், நில விவரங்கள், பயிர் தகவல்கள் போன்ற முக்கிய தகவல்கள் பதிவாகும். போலியான விண்ணப்பங்களை தவிர்த்து, உண்மையான விவசாயிகளுக்கு மட்டும் அரசு உதவித் தொகை சென்றடைய வேண்டும் என்பதே இந்த ஐடி உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கம்.

45
பிஎம் கிசான் திட்டம்
Image Credit : Getty

பிஎம் கிசான் திட்டம்

முன்னதாக நிலம் இல்லாத சிலரும் பிஎம் கிசான் பலனை பெற்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயி ஐடி மூலம் நில ஆவணங்கள் நேரடியாக இணைக்கப்படுவதால், தகுதியானவர்களே திட்டத்தில் சேர முடியும். மாநில வேளாண் துறை இணையதளத்தில் ஆதார், நிலப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி ஐடி-க்கு விண்ணப்பிக்கலாம்.

55
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்
Image Credit : Getty

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க சிரமம் உள்ள விவசாயிகள், அருகிலுள்ள பொது சேவை மையங்கள் (CSC) அல்லது கிராமம், வட்டார அளவில் வேளாண் துறை நடத்தும் பதிவு முகாம்களை அணுகலாம். 22வது தவணைக்காக காத்திருப்பவர்களும், புதிதாக சேர விரும்புவோரும், தாமதம் செய்யாமல் விவசாயி ஐடி-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும். கட்டாயமாக்கப்பட்ட மாநிலங்களில் இந்த ஐடி இல்லாமல் பிஎம் கிசான் பலன் கிடைக்காது என்பதே முக்கிய அறிவுறுத்தலாகும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி
விவசாயம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK Party: தமிழ்நாட்டைத் தொடர்ந்து பெங்களூருவா?.. தவெகவின் அடுத்த அரசியல் மூவ் இதுதானா!
Recommended image2
காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா..? அடாவடித்தனத்தின் உச்சம்..! கொதித்தெழுந்த சீமான்..
Recommended image3
SBI: ஊழியர்கள் வேலை நிறுத்தம், 6 நாள் திண்டாட்டம் தான்..? SBI வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணிடாதீங்க..
Related Stories
Recommended image1
கோடை காலத்தில் தினமும் ரூ.1,000 சம்பாதிக்கலாம்.. வெயில் அதிகமானா காசும் அதிகரிக்கும்
Recommended image2
தவெகவில் இருந்து விலகும் விஜயின் தளபதி.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. கட்சி என்ன ஆகப்போகுதோ.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved