சட்டம் ஒரு இருட்டறைனு சொல்ல முடியாது, சட்டத்திற்கும் கண் உண்டு – உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிதேவதையின் சிலை!
New Statue of Justice in Supreme Court: உச்சநீதிமன்றத்தில் கண்ணை கட்டாத நீதிதேவதை சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை, சட்டம் குருடல்ல, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்ற செய்தியை தெரிவிக்கிறது. வாளுக்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை வைத்திருப்பதும் புதிய அம்சமாகும்.
New Statue of Justice in Supreme Court
New Statue of Justice in Supreme Court:நாட்டில் சட்டம் கண்ணைக் கட்டிக் கொண்டு குருடாகவும் இல்லை, அது தண்டனையை அடையாளப்படுத்தவும் இல்லை என்பதை விளக்கும் வகையிலான கண்ணை கட்டாத நீதிதேவதை சிலையானது உச்சநீதிமன்றத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
New Statue of Justice in Supreme Court
மேலும், அந்த சிலையின் ஒரு கையில் நியாத்தை குறிக்கும் வகையில் தராசும், மற்றொரு புறம் வாள் வைத்திருந்த நிலையில் அதற்கு பதிலாக அரசியலப்பு சட்ட புத்தகம் இடம் பெற்றிருக்கும் வகையில் புதிய சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
New Statue of Justice in Supreme Court
இதற்கு முன் நீதிமன்றங்களில் கண்ணைக் கட்டிக் கொண்டிருந்த நீதி தேவதையின் சிலை வைக்கப்பட்டிருந்தது. செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை பார்க்க முடியாது என்பதையும், அதிகாரம் மற்றும் அநீதியை தண்டிக்கும் சக்தியை குறிக்கும் வகையில் கையில் வாள் ஒன்றையும் வைத்திருப்பது போன்று கண் கட்டப்பட்டிருப்பதோடு, கையில் வாள் வைத்திருப்பது போன்றும் சிலை இருந்தது.
New Statue of Justice in Supreme Court
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் நூலகத்தில் புதிய சிலை, கண்களைத் திறந்து, இடது கையில் அரசியலமைப்புச் சட் புத்தகம் இடம் பெற்றிருக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கையில் வாள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Blind justice symbol, New Statue of Justice in Supreme Court
தலைமை நீதிபதி அலுவலகத்துடன் தொடர்புடைய உயர்மட்ட ஆதாரங்களின்படி, நீதிபதி சந்திரசூட், பிரிட்டிஷ் பாரம்பரியத்திலிருந்து இந்தியா முன்னேற வேண்டும். சட்டமானது ஒருபோதும் குருடாகாது. அனைவரையும் சமமாகவே பார்க்கவே சட்டம் என்று கூறியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.
New Statue of Justice in Supreme Court
"எனவே, நீதிதேவதை வடிவத்தை மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறியதைத் தொடர்ந்து கண் கட்டப்படாத நிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாளிற்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் கூறியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நீதிதேவதை சிலையின் மூலமாக நீதி வழங்குகிறார் என்ற செய்தி தான் செல்கிறது.