பொதுவெளியில் மருமகளிடம் இப்படியா நடப்பது? முகேஷ் அம்பானியின் செயலால் முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்
அண்மையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் வழிபாடு மேற்கொண்ட முகேஷ் அம்பானி தனது மருமகளிடம் நடந்து கொண்ட விதம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Anant Ambani
ஆசியாவின் பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானியில் எது நடந்தாலும் அது பொதுமக்களிடையே வித்தியாசமாக பார்க்கப்படுவது வழக்கம். ஏனென்றால் அவர்கள் செலவு செய்யும் விதம் அல்லது அவர்கள் செயலால் சர்ச்சையில் சிக்கும் விதம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் முகேஷ் அம்பானி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த நிலையில், அங்கு அவர் செய்த செயல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Anant Ambani
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்டிற்கும் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபல நடிகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கிட்டதட்ட 1 வாரத்திற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் அம்பானி வீட்டு திருமணத்தை பற்றியே செய்தி வெளியிடும் அளவிற்கு திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனிடையே ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி விழாவின் போதும் முகேஷ் அம்பானி கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்வது வழக்கம். கடந்த 15 ஆண்டுகளாக அவர் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
Mukesh Ambani
அந்த வகையில் அண்மையில் லால்பாக் ராஜா விநாயகருக்கு ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்க கிரீடத்தை அம்பானி குடும்பத்தினர் விநாயகருக்கு வழங்கி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு அனைவரும் வீட்டிற்கு புறப்படும் தருவாயில் செய்தியாளர்களுக்கு போட்டோ போஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Mukesh Ambani
அப்போது முன்னோக்கி நடந்த ராதிகா மெர்சண்டை மாமனார் முகேஷ் அம்பானி, தனது மருமகளின் வயிற்றில் கை வைத்து பின்னோக்கி இழுப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பகிரும் இணையவாசிகள் பலரும் பொது வெளியில் மருமகளிடம் இப்படியா நடந்துகொள்வது? ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருக்கு ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்வது? குட் டச், பேட் டச் பற்றி தெரியாதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.