ஜெர்மனியில் நடந்த மஹுவா மொய்த்ரா திருமணம்! புகைப்படம் வெளியிட்டு அறிவிப்பு!
காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை மணந்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார். ஜெர்மனியில் எளிமையாக நடைபெற்ற திருமணப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மஹுவா மொய்த்ரா திருமணம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை மணந்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பதிவில், "அன்பு மற்றும் நல்வாழ்த்துக்களுக்காக அனைவருக்கும் நன்றி!" என்று குறிப்பிட்டு, திருமண கேக் வெட்டும் புகைப்படத்தையும் பதிவில் இணைத்துள்ளார்.
Thank you everyone for the love and good wishes!! So grateful pic.twitter.com/hbkPdE2X7z
— Mahua Moitra (@MahuaMoitra) June 5, 2025
பினாகி மிஸ்ரா
மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பினாகி மிஸ்ரா, ஒடிசாவின் பூரி தொகுதியில் இருந்து நான்கு முறை மக்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர். உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் உள்ளார்.
திருமண வாழ்த்து
மஹுவா மொய்த்ரா - பினாகி மிஸ்ராவின் இந்த திருமணச் செய்தி வெளியானதும், அரசியல் வட்டாரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெர்மனியில் திருமணம்
இருவரும் ஜெர்மனியில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருமணம் தனிப்பட்ட முறையில், ஆடம்பரக் கொண்டாட்டங்கள் ஏதும் இல்லாமல் எளிமையாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

