மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் இருந்து வீட்டுக்கு கொண்டு வர வேண்டிய 5 புனித பொருட்கள்!
மகா கும்பமேளாவிலிருந்து சில பொருட்களை கொண்டு வருவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, இது உங்கள் வீட்டிற்கு நேர்மறை மற்றும் செழிப்பைக் கொண்டுவருகிறது.
Mahakumbh 2025
நீங்கள் மகா கும்பமேளாவிற்குச் சென்றால், கங்கை நதிக்கரையிலிருந்து புனித மண்ணைக் கொண்டு வாருங்கள். அதை உங்கள் துளசி செடிக்குப் பயன்படுத்துங்கள் அல்லது உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு சிவப்புப் பையில் அந்த மண்ணை போட்டு வைத்திருங்கள்.
Mahakumbh 2025
மகா கும்பமேளாவிலிருந்து ருத்ராட்சம் அல்லது துளசி மணிகளைக் கொண்டு வாருங்கள். இவை இந்து மதத்தில் புனிதமானவை, எதிர்மறையை நீக்கி மன அமைதியை ஊக்குவிக்கின்றன.
Mahakumbh 2025
திரிவேணி சங்கமத்தில் குளித்த பிறகு, அனுமன் கோவிலில் இருந்து துளசி இலைகளை வீட்டுக்கொண்டு வருவது நல்லது. நல்ல அதிர்ஷ்டத்திற்காக அவற்றை உங்கள் பாதுகாப்பான இடத்தில் ஒரு சிவப்புத் துணியில் வைக்கலாம்.
Mahakumbh 2025
மகா கும்பமேளா விழாவில் இருந்து சிவலிங்கம், மத நூல்கள் அல்லது சங்கு அல்லது மணி போன்ற வழிபாட்டுப் பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரலாம்..
Mahakumbh 2025
திரிவேணி சங்கமத்தின் புனித நீரைக் கொண்டு வந்து உங்கள் வீட்டைச் சுற்றி தெளித்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி நீங்கி, செல்வ செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை