ஷாக்கிங் நியூஸ்! 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை!
50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ரூ.230 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

50,000 அரசு ஊழியர்கள்
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் இருந்து வருகிறார். இந்நிலையில் அம்மாநில அரசு ஊழியர்கள் 50,000 பேருக்கு 6 மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் ரூ.230 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 9 சதவிகிதம் ஆகும்.
சம்பளம் இல்லை
இதுதொடர்பாக மே 23ம் தேதி கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் (CTA) அனைத்து வரைதல் மற்றும் விநியோக அதிகாரிகளுக்கு (DDOs) கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், அரசு ஆவணங்களில் அவர்களின் பெயர் மற்றும் பணியாளர் குறியீடு உள்ள ஊழியர்களுக்கு டிசம்பர் 2024 முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளார்களா? அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது பொய்யான ஊழியர்களா? ஊதியம் பெறாத 50,000 ஊழியர்களில் 40,000 பேர் வழக்கமான ஊழியர்களாகவும் 10,000 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் உள்ளனர்.
ரூ.230 கோடி முறைகேடு
ஒருவேளை 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? அரசு பணிக்குழுவில் 9 சதவிகித ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? ரூ.230 கோடி முறைகேடு நடப்பதை அரசு தெரியாமல் அனுமதித்து வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. நெருக்கடி காரணமாகவே கடிதம் 6 மாத காலம் சம்பளம் வழங்காததன் காரணமாக 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
6000 துறை அதிகாரிகளுக்கு கடிதம்
இதனால் கருவூல மற்றும் கணக்கு ஆணையம் மே 23ம் தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு சுமார் 6,000 துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியது. ஆனாலும் இந்த கடிதம் தொடர்பாக ஆளும் பாஜக அரசு எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.