ரயில் டிக்கெட் தொலைந்தால் கவலைப் படாதீங்க... இதைச் செய்தால் போதும்!
எதிர்பாராத விதமாக ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் பயணிகளுக்கு உதவ ரயில்வே டூப்ளிகேட் டிக்கெட் வழங்குகிறது.
எதிர்பாராத விதமாக ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் இக்கட்டான நிலை ஏற்படும். அந்தச் சூழலில் புதிதாக டிக்கெட் எடுக்க முயற்சி செய்தால், டிக்கெட் கிடைக்காமல் கிடைக்காது. உறுதி செய்யப்படாமல் போகும். இந்த நிலையில் தவிக்கும் பயணிக்கு உதவ ரயில்வே ஒரு திட்டம் வைத்துள்ளது.
ரயிலில் ஏறுவதற்கு முன்பே டிக்கெட் தொலைந்துவிட்டால், கவலை கொள்ளத் தேவை இல்லை. பயணிகளின் நலனுக்காக இந்திய ரயில்வே டூப்ளிகேட் டிக்கெட் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. எந்த வகுப்பில் டிக்கெட் எடுக்கப்பட்டது என்பதைப் பொருத்து ரயில்வே விதிகளின்படி டூப்ளிகேட் டிக்கெட் பெறலாம்.
அதற்கு முதலில் டிக்கெட் தொலைந்துவிட்டது எனத் தெரிந்ததும், ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் பரிசோதகரை அணுவேண்டும். பின்னர், அவர் அளிக்கும் விவரங்களைப் பெற்று டிக்கெட் கவுண்டருக்குச் சென்று டிக்கெட் நகலைப் பெறலாம்.
டூப்ளிகேட் டிக்கெட் பெறும்போது அபராதமும் செலுத்த வேண்டும். ரயிலில் சார்ட் தயாரிப்பதற்கு முன்பே டிக்கெட் தொலைந்துவிட்டால் குறைந்த செலவில் டூப்ளிகேட் டிக்கெட் கிடைக்கும்.
3 டயர் ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்ட்டுகளின் டூப்ளிகேட்டை பெற ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். இதற்கு மேல் உள்ள வகுப்புகளில் எடுத்த டிக்கெட் என்றால், ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.
ரயில் புறப்படுவதற்கு முன், சார்ட் தயாரித்த பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் காணவில்லை என்றால், டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும்.
ரயில் டிக்கெட் கிழிந்துவிட்டது என்றாலும் டூப்ளிகேட் டிக்கெட் எடுக்க முடியும். அதற்கு டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
காத்திருப்புப் பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்ட்) உள்ள டிக்கெட்டுகளுக்கு டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்படாது.
டூப்ளிகேட் டிக்கெட் எடுத்த பிறகு தொலைந்து போன டிக்கெட் மீண்டும் கிடைத்துவிட்டால், இரண்டு டிக்கெட்டுகளையும் டிக்கெட் கவுண்டரிலோ, டிக்கெட் பரிசோதகரிடமோ காட்டி, டூப்ளிகேட் டிக்கெட்டு வாங்க செலுத்திய அபராதப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
ரயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனைக்கு வரும்போது டிக்கெட் தொலைந்து போயிருந்தால், ஆதார், பான் கார்டு, லைசென்ஸ் போன்ற ஏதேனும் ஒரு அடையாளச் சான்றினைக் காட்டலாம். அடையாளச் சான்றில் உள்ள பெயர் டிக்கெட் பரிசோதகரிடம் உள்ள பெயர் பட்டியலில் இருந்தால் டிக்கெட் சரிபார்க்கப்பட்டதாகக் கருதப்படும்.