- Home
- இந்தியா
- ஆம்னி பேருந்து பயங்கர தீ விபத்து 25 பயணிகள் உயிரிழப்பு? விபத்துக்கு இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!
ஆம்னி பேருந்து பயங்கர தீ விபத்து 25 பயணிகள் உயிரிழப்பு? விபத்துக்கு இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!
ஆந்திராவின் கர்னூல் அருகே ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் காவேரி டிராவல்ஸ் ஆம்னி பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, 12 பேர் காயங்களுடன் தப்பினர்.

ஆம்னி பேருந்தில் தீ விபத்து
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு 42 பயணிகளுடன் நேற்று இரவு காவேரி டிராவல்ஸ் நிறுவனத்தின் தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. பேருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதிய வேகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய தீ
அதிகாலை என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன நடந்தது என்று எழுந்து பார்ப்பதற்குள் தீ மளமளவென பேருந்தும் முழுவதும் பரவியது. இதனால் பயணிகள் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று அலறி துடித்தனர். இதில் சிலர் பேருந்தில் இருந்து ஏகிறி கீழே குதித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
25 பேர் உடல் கருகி பலி
சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 25 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 12 காயமின்றி உயிர் தப்பினர். சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
முதல்வர் இரங்கல்
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த கோர விபத்து குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.