திரும்பி பார்க்கும் உலக நாடுகள்.! 100வது ராக்கெட்- தேதி குறித்த இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டை ஜனவரி 29 அன்று விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்.
திரும்பி பார்க்கும் உலக நாடுகள்.! 100வது ராக்கெட்- தேதி குறித்த இஸ்ரோ
விண்வெளியில் சாதிக்கும் இந்தியா
இந்தியா விண்வெளி துறையில் கலக்கி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்திய விஞ்ஞானிகள் தான். அந்த வகையில் வளர்ந்த நாடுகள் இந்தியாவை திருப்பி பார்க்க வைக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. அதன் சந்திரியான், மங்கள்யான் என பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியுள்ளது. அதிலும் சந்திரனில் உலக நாடுகள் போகாத இடத்தில் கால் பதித்துள்ளது.
ISRO rocket launch
100 ராக்கெட் அசத்தும் இஸ்ரோ
இந்த நிலையில் ஆகஸ்ட் 10, 1979 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் பெரிய ராக்கெட் SLV-ஏறக்குறைய 46 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளித் துறையில் இஸ்ரோ 100 ராக்கெட்டை ஏவி சதம் அடிக்கவுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சுழல் வடிவ தீவாக அமைந்துள்ளது ஸ்ரீஹரிகோட்டா, மேற்கில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கிழக்கில் வங்காள விரிகுடாவின் நடுவே அமைந்துள்ளது,
GSLV F 15
தேதி குறித்த இஸ்ரோ
அந்த வகையில் இந்தியா 66 பிஎஸ்எல்வி, 16 ஜிஎஸ்எல்வி, 7 எல் வஎம்3 , 4 எஎஸ்எல்வி, 4 எஸ்எல்வி மற்றும் 3 எஸ் எஸ்எல்வி ராக்கெட்டுகளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இதுவரை விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக .தனது 100 வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கை கோள்களுடன் வருகின்ற 29ம் தேதி காலை 6.23 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டின் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியானது தொடங்கியுள்ளது.
gslv space research
NVS-02 பயன்பாடு என்ன.?
அதன் படி 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை காலை (ஜன. 28) 5.23 மணிக்கு தொடங்குகிறது. விண்ணில் ஏவவுள்ள ராக்கெட் மூலம் NVS-02 எனும் செயற்கைகோளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. உள்நாட்டிலேயே தயாரித்த கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட GSLV-F15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.
100th rocket GSLV-F15
பேரிடர் கால பயன்பாடு
எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள் இடம்பெற்றுள்ளது. நாளை மறுதினம் ஏவ்வுள்ள NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைகோள்களுடன் இணைந்து காலநிலை, தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் எனவும் பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.