MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஒரு ரயிலைத் தவறவிட்டால், அதே டிக்கெட்டுடன் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரயில்வே விதி என்ன?

ஒரு ரயிலைத் தவறவிட்டால், அதே டிக்கெட்டுடன் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரயில்வே விதி என்ன?

ரயிலைத் தவறவிடுவதால் நேரம் வீணாவதோடு பண இழப்பையும் ஏற்படுத்தும். ஆனால், ஒரு ரயிலை மிஸ் பண்ணிய பயணிகள் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வே விதிகள் என்ன சொல்கிறது தெரியுமா?

2 Min read
Author : SG Balan
| Updated : Sep 28 2024, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்ய இந்திய ரயில்வேயைப் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 24 மில்லியன் பயணிகள் இந்திய ரயில்வேயை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்க, ரயில் பயணிகள் ஒரு ரயிலைத் தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்? தவறவிட்ட ரயிலுக்கான டிக்கெட்டை வைத்து மாற்று ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன என்றுப பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Indian Railways

Indian Railways

ரயிலை தவறவிடுவது பயணிகளின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். ரயிலைத் தவறவிட்டால், பிறகு அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் விதிகளின்படி, ஒரு பயணி பொது கோச் டிக்கெட் வைத்திருந்தால், அவர் வேறு ரயிலில் பயணம் செய்யலாம்.

36

ஆனால், வந்தே பாரத், சூப்பர் பாஸ்ட், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயணிகளிடம் முன்பதிவு டிக்கெட் இருந்தாலும், ஒருமுறை ரயிலைத் தவறவிட்டுவிட்டால், அதே டிக்கெட்டை வைத்துக்கொண்டு மற்றொரு ரயிலில் பயணம் செய்ய முடியாது. தவறுதலாகக் கூட அதே டிக்கெட்டைக் கொண்டு வேறு ரயிலில் பயணிக்க வேண்டாம், ஏனெனில் பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படலாம்.

46

ரயிலைத் தவறவிட்டால் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு, IRCTC செயலியில் TDR பகுதியில் ஆப்ஷ் இருக்கும். அதில் தவறவிட்ட ரயிலுக்கான டிக்கெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு ரயிலைத் தவறவிட்டதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு TDR தாக்கல் செய்ய வேண்டும். பரிசீலனைக்குப் பின் 60 நாட்களுக்குள் பணம் திரும்பக் கிடைக்கும்.

56

ரயில்வே விதிகளின்படி, உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், மொத்தத் தொகையில் 25% வரை பிடித்தம் செய்யப்பட்டு மீதித் தொகை கிடைக்கும்.

ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட்டின் பாதித் தொகை, அதாவது 50% கழிக்கப்படும். மீதி திரும்பத் தரப்படும்.

66

காத்திருப்பு பட்டியல், RAC போன்ற நிலைகளில் இருக்கும் டிக்கெட்டுகளையும் ரத்து செய்தால் பணம் திரும்பக் கிடைக்கும். இந்தச் சூழ்நிலையில், ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்புவரை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. இதைவிடத் தாமதமானால், பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய இரயில்வே
ரயில்
தொடர்வண்டி பயணச்சீட்டு
டிக்கெட் முன்பதிவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Nepal Train: பாஸ்போர்ட் வேண்டாம்! விசா வேண்டாம்! ரயிலில் ஏறுனா நேபாளம் போக‌லாம்!" - IRCTC செம பிளான்!
Recommended image2
Child Birth : 3வது குழந்தைக்கு ரூ.30,000.. 4வது குழந்தைக்கு ரூ.40,000.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
Recommended image3
Railway Rules: பிளாட்பாரத்துல சுத்துனா ஜெயில்? ரயில்வேயின் 'டாப் சீக்ரெட்' விதிகள்.. பயணிகள் உஷார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved