MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இனி தட்கல் டிக்கெட் புக் செய்ய 'இது' கட்டாயம்! இந்திய ரயில்வே அதிரடி உத்தரவு!

இனி தட்கல் டிக்கெட் புக் செய்ய 'இது' கட்டாயம்! இந்திய ரயில்வே அதிரடி உத்தரவு!

இனி ரயில் தட்கல் டிக்கெட் புக் செய்ய ஒரு முக்கிய நிபந்தனையை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 05 2025, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aadhaar Verification Mandatory FOR Tatkal Tickets Booking
Image Credit : Asianet News

Aadhaar Verification Mandatory FOR Tatkal Tickets Booking

இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ரயில்களில் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. ஆனால் அவசர காலத்தில் ரயில்வேயின் தட்கல் திட்டம் கைகொடுக்கிறது. தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தட்கல் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பு
Image Credit : social media

தட்கல் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பு

ஆனாலும் அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் இருப்பதால் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை எடுப்பது பெரும் சவாலாக உள்ளது. பெரும்பாலனவர்களால் விரைவாக கன்பார்ம் செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.

 சாமானிய மக்களுக்கு தட்கல் டிக்கெட் எளிதில் கிடைக்காத நிலையில், ஏஜெண்ட்டுகள் எளிதாக கெத்து, கொத்தாக தட்கல் டிக்கெட் எடுப்பது எப்படி? என மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்,

34
தட்கல் டிக்கெட் எடுக்க ஆதார் வெரிபிகேஷன் கட்டாயம்
Image Credit : our own

தட்கல் டிக்கெட் எடுக்க ஆதார் வெரிபிகேஷன் கட்டாயம்

பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட போலி கணக்குகளை வைத்து தட்கல் டிக்கெட் எடுப்பதாகவும், தட்கலில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாகவும் ரயில்வேக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. 

இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் அடிப்படையிலான வெரிபிகேஷன் செய்யப்படும் என ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்மூலம் குளறுபடிகள் செய்து தட்கல் டிக்கெட் எடுப்பது தவிர்க்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

மோசடியாளர்களை தவிர்க்க முடியும்

அதாவது தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டால் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு ஒரு ஓபிடி எண் வரும். அந்த எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. 

கவுன்ட்டர்களில் தட்கல் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். இந்த ஆதார் வெரிபிகேஷன் மூலமாக மோசடியாளர்களை, குளறுபடிகளை தவிர்க்க முடியும் என்பது ரயில்வேயின் கருத்தாக உள்ளது.

44
ரயில்வேக்கு பொதுமக்கள் முன்வைக்கும் கருத்து
Image Credit : Google

ரயில்வேக்கு பொதுமக்கள் முன்வைக்கும் கருத்து

இந்த ஆதார் வெரிபிகேஷன் மூலம் சரியான ஆதார் வைத்திருப்பவர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்படும். மோசடியாக அதிக டிக்கெட் புக் செய்யும் இடைத்தரரர்களை ஒழித்துக் கட்ட முடியும். ரயில்வேயின் இந்த முடிவுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தாலும், மொபைலில் ஆதார் ஓடிடி பெற்று அதை உள்ளீடு செய்வதற்குள் நேரம் ஓடிவிடுமே. 

அதற்குள் டிக்கெட் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? என்ற கருத்துகளையும் முன்வைத்துள்ளனர். தட்கல் டிக்கெட் ஆதார் வெரிபிகேஷன் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தட்கல் டிக்கெட்
ரயில் டிக்கெட் முன்பதிவு
இந்திய இரயில்வே
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Governance : விவாதத்திற்கு பதில் கூச்சல் : இளைஞர்களுக்கு புதிய இந்தியா தரும் பாடம்!
Recommended image2
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் ஃபார்ச்சூனர் கார் பரிசு... 6 வயது பேரனுக்காக பாட்டி அடித்த ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
தட்கல் டிக்கெட் எடுப்பது இனி ஈஸி! ரயில்வேயின் SwaRail ஆப்! எப்படி டவுன்லோட் செய்வது?
Recommended image2
ரயில் தட்கல் டிக்கெட் இனி ஈஸியாக புக் பண்ணலாம்! இந்த 5 'ட்ரிக்ஸ்' ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved