ரயில் தட்கல் டிக்கெட் இனி ஈஸியாக புக் பண்ணலாம்! இந்த 5 'ட்ரிக்ஸ்' ஃபாலோ பண்ணுங்க!
ரயில் தட்கல் டிக்கெட் எடுப்பது இப்போது குதிரை கொம்பாகி விட்டது. தட்கல் டிக்கெட் ஈஸியாக எடுப்பதற்கான 5 வழிகளை பார்க்கலாம்.

Train Tatkal Ticket Booking Tips
இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ரயில்களில் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது.
ஆனால் அவசர காலத்தில் ரயில்வேயின் தட்கல் திட்டம் கைகொடுக்கிறது. தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
ரயில் தட்கல் டிக்கெட்
ஆனாலும் அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் இருப்பதால் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை எடுப்பது பெரும் சவாலாக உள்ளது. பெரும்பாலனவர்களால் விரைவாக கன்பார்ம் செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இவர்களுக்கு உதவும் வகையில் தட்கல் டிக்கெட் ஈசியாக எடுப்பது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்.
இன்டர்நெட் இணைப்பை சரிபார்க்கவும்
ரயிலில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்க்க வேண்டும். தட்கல் முன்பதிவில், 1-2 நிமிடங்கள் மட்டுமே சரியான நேரம் கிடைக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த நேரத்தில் உங்கள் இணைய இணைப்பு தொந்தரவு செய்யப்பட்டால், அது கடினமாக இருக்கும்.
ரயில் தட்கல் டிக்கெட் எளிதாக எடுப்பது எப்படி?
உள்நுழைய சரியான நேரம் எது?
தட்கல் முன்பதிவு செய்ய நீங்கள் சரியான நேரத்தில் உள்நுழைய வேண்டும். ஏசி பெட்டிக்கான தட்கல் முன்பதிவு ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது, ஸ்லீப்பர் பெட்டிக்கு, தட்கல் முன்பதிவு காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. எனவே, முன்பதிவு தொடங்குவதற்கு 2-3 நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் உள்நுழைய வேண்டும்.
ஒரு முதன்மைப் பட்டியலைத் தயாரிக்கவும்
IRCTC அதன் வாடிக்கையாளர்களுக்கு 'மாஸ்டர் பட்டியல்' எனப்படும் சிறப்பு அம்சத்தை வழங்குகிறது. அதில் அவர்கள் முன்பதிவு செய்வதற்கு முன்பு பயணிகளின் அனைத்து விவரங்களையும் நிரப்ப முடியும். இது முன்பதிவு செய்யும் போது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
ரயில் தட்கல் டிக்கெட் எடுப்பதற்கான டிப்ஸ்
UPI கட்டணத்தைப் பயன்படுத்தவும்
நீங்கள் IRCTC இணையதளத்தில் ஆன்லைன் அல்லது கார்டு மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இணைய வங்கி மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது OTP சரிபார்ப்பு அவசியம். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உங்கள் ஓடிபிஐ பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திற்குள் டிக்கெட் தீர்ந்து விடலாம்.
ஆகவே இந்த நேரத்தைச் சேமிக்க, OTP இல்லாத கட்டண முறையைப் பின்பற்றவும். ரயில்வே இ-வாலட், Paytm மற்றும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
தேவை அதிகம் இல்லாத ரயில்கள்
தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது எப்போதும் அதிக டிமாண்ட் இருக்கும் ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது கடினம். ஆகவே நீங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லும் அதிகம் டிமாண்ட் இல்லாத ரயில்களில் தட்கல் புக் செய்தால் கன்பார்ம் ஆக அதிக வாய்ப்புள்ளது.