MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு! பெரும் பலம் பெறும் இந்திய ராணுவம்!

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு! பெரும் பலம் பெறும் இந்திய ராணுவம்!

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : May 04 2025, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Indian Army to procure next-generation air defense system: பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் முப்படைகளும் தயாராக உள்ளது. இந்நிலையில், அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு முடிவு செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Indian Army

Indian Army

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு

அதாவது பாகிஸ்தானுடன் நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், 6 கிமீ வரையிலான தூரத்தில் எதிரி போர் விமானங்கள், விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இடைமறித்து அழிக்கக்கூடிய மற்றொரு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கு இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.  இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''48 ஏவுதள கருவிகள், இரவிலும் ராணுவ செயல்பாடுகளை மேற்கொள்ளும் 48 தொழில்நுட்பங்கள், 85 ஏவுகணைகள் மற்றும் மிக குறுகிய தொலைவு இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பைஒ கொள்முதல் செய்வதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கப்பட்டன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

34
Next-Generation Air Defense System

Next-Generation Air Defense System

அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தப்படும்

அனைத்து வானிலை வான் பாதுகாப்பு அமைப்பு, நெரிசல் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் பாரா-டிராப் செய்யக்கூடிய திறன் கொண்டதாக இருக்க வேண்டும், இது சமவெளிகள் மற்றும் பாலைவனங்கள் முதல் சுமார் 4,500 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதிகள் வரை அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
Indian Army fighter jet

Indian Army fighter jet

அனைத்து வகை கால நிலையிலும் செயல்படும் 

அனைத்து வகை கால நிலையிலும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படும். அதாவது மைனஸ் 30 டிகிரிக்கு கீழ் உள்ள கடுங்குளிா் நிலவும் காலநிலை மற்றும் 50 டிகிரிக்கு மேலான வெப்பநிலை நிலவும் காலநிலையிலும் செயல்படும். மேலும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு குறைந்தபட்சம் 500 மீட்டாரிலும், அதிகபட்சமாக 6,000 மீட்டா் வரையிலான உயரத்திலும் செயல்படும். போா்விமானம், ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் என எவ்வித தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர்
பஹல்காம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Recommended image2
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!
Recommended image3
150 vs 151: மகனை ஜெயிக்க வைத்துவிட்டு மறைந்த தாய்... நெஞ்சை உருக்கும் தேர்தல் களம்!
Related Stories
Recommended image1
பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆர்பிஎஃப் வீரர் பணிநீக்கம்!
Recommended image2
எச்சரித்த இந்திய ராணுவம்; கொடியுடன் பின்வாங்கிய பாகிஸ்தான் துருப்புகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved