பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க 100+ புதிய சாட்டிலைட்டுகள்: இஸ்ரோ அறிவிப்பு
எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பை மேம்படுத்த இஸ்ரோ அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 முதல் 150 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும். தற்போதுள்ள 55 செயற்கைக்கோள்கள் போதுமானதாக இல்லை என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

ISRO news
எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 100 முதல் 150 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் அறிவித்திருக்கிறார். தற்போது இந்தியா சுமார் 55 செயற்கைக்கோள்களை இயக்குகிறது என்றும், நாட்டின் விரிவான எல்லைகள் மற்றும் 7,500 கிலோமீட்டர் கடற்கரையைக் கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ISRO satellite
விண்வெளித் துறையின் செயலாளராகவும் பணியாற்றும் நாராயணன், விண்வெளித் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிக்கும் என்று விளக்கினார். நாட்டின் எல்லைகள் மற்றும் கடலோரப் பகுதிகளை திறம்பட கண்காணிக்க இன்னும் அதிகமான செயற்கைக்கோள்கள் நமக்குத் தேவை என்று அவர் வலியுறுத்தினார்,
ISRO update
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் உயிரிழந்த துயரகரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரோவின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாராயணன், செயற்கைக்கோள் திறன்களை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
V. Narayanan
SpaDeX பயணங்களின் ஒரு பகுதியாக இரண்டாவது செயற்கைக்கோள் இணைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததையும் நாராயணன் எடுத்துரைத்தார். இந்த மைல்கல்லை எட்டிய நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார். இந்தியாவுக்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்தச் சாதனையை நிகழ்ச்சியுள்ளன.
ISRO chief V Narayanan
மேலும், காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்கைக்கோளை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் பணியாற்றி வருவதாகவும், ஜி20 நாடுகளுக்காக இந்தத் திட்டம் செயல்படுவதாகவும் நாராயணன் கூறினார். அதன் பேலோடில் சுமார் 50 சதவீதம் இந்தியாவால் உருவாக்கப்படும், மற்ற பேலோடுகள் இதர ஜி20 நாடுகளில் இருந்து வரும் என்று அவர் தெரிவித்தார்.