- Home
- இந்தியா
- Hormuz Strait: 60 நாள் எண்ணெய் தான் கையிருப்பு... ஹார்முஸ் முற்றுகையால் இந்தியா தாக்குப்பிடிக்குமா?
Hormuz Strait: 60 நாள் எண்ணெய் தான் கையிருப்பு... ஹார்முஸ் முற்றுகையால் இந்தியா தாக்குப்பிடிக்குமா?
ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம் காாரணமாக, இந்தியாவிடம் வெறும் 60 நாட்களுக்கு மட்டுமே கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. 85% இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியாவுக்கு, இந்த நெருக்கடி விநியோக தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
17

Image Credit : X
ஹோர்முஸ் ஜலசந்தி நெருக்கடி
மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரான் எடுத்துள்ள சமீபத்திய நடவடிக்கைகள், உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். உலகின் 20% கச்சா எண்ணெய் இந்த வழியாகத்தான் செல்கிறது. அதனால், இங்கு ஏற்படும் சின்ன சலசலப்பு கூட, இந்தியாவைப் போன்ற பெரிய இறக்குமதியாளர்களை நேரடியாக பாதிக்கிறது.
27
Image Credit : X
முடிவை மாற்றிய ஈரான்.. மூடப்பட்ட ஹோர்முஸ்
வெள்ளிக்கிழமை அன்று, ஈரான் வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு வழியைத் திறப்பதாக அறிவித்தது. இது ஒரு நிம்மதி பெருமூச்சை வரவழைத்தது. ஆனால், சில மணி நேரங்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது. அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் முற்றுகைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீண்டும் தனது கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (Islamic Revolutionary Guard Corps), ஹார்முஸ் அருகே எந்தவொரு நடமாட்டமும் 'எதிரிக்கு ஒத்துழைப்பதாக' கருதப்படும் என்று எச்சரித்தது. இது கடல் வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.
37
Image Credit : X
கவலையில் இந்தியா
இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85% இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பகுதி மேற்கு ஆசியாவிலிருந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும், விநியோகச் சங்கிலி, சரக்குக் கட்டணம் மற்றும் காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை நேரடியாகப் பாதிக்கும். சமீபத்தில் ஈரானியப் படைகள் இந்தியக் கொடியுடன் சென்ற கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வந்த செய்தி, டெல்லியின் கவலையை இன்னும் அதிகரித்துள்ளது.
47
Image Credit : X
60-நாள் கையிருப்பு
அரசாங்கத்தின் தகவல்படி, இந்தியாவிடம் தற்போது கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) என சுமார் 60 நாட்களுக்குத் தேவையான கையிருப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த சேமிப்புத் திறன் சுமார் 74 நாட்கள். ஆனால், சர்வதேச எரிசக்தி அமைப்பின் (International Energy Agency) தரநிலைகளின்படி, 90 நாட்கள் கையிருப்பு வைத்திருப்பதுதான் சிறந்தது. எனவே, இந்த நெருக்கடி நீண்டால் இந்தியாவுக்கு அது பெரும் சவாலாக அமையும்.
57
Image Credit : X
மாற்று வழிகள்..
இந்த ஆபத்தைக் குறைக்க, இந்தியா பல வழிகளில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகரித்துள்ளது. மேலும், செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் போன்ற மாற்றுப் பாதைகளையும் பயன்படுத்துகிறது. ஆனால், இந்தப் பாதைகளில் பயணிக்க ஆகும் செலவு அதிகம். மேலும், இவை ஹார்முஸ் ஜலசந்திக்கு முழுமையான மாற்றாக இருக்க முடியாது.
67
Image Credit : X
எண்ணெய் விலை விளையாட்டு
சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிக்கும்போது, கச்சா எண்ணெய் சந்தையில் 'ரிஸ்க் பிரீமியம்' என்ற ஒன்று சேர்க்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்கிறது. இதன் நேரடி பாதிப்பு, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை மற்றும் பணவீக்கத்தில் தெரியும். சமீபத்திய விலை ஏற்ற இறக்கங்கள், சந்தை எவ்வளவு சீக்கிரம் இது போன்ற புவி-அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
77
Image Credit : X
அடுத்து என்ன? தயாரான இந்தியாவா அல்லது வளர்ந்து வரும் அபாயமா?
2026 ஏப்ரல்-மே மாதங்களுக்கான தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாகவும், விநியோகத்தைப் பராமரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், ஹோர்முஸ் இடையூறு தொடர்ந்தால், அது இந்தியாவின் எரிசக்தி நிலைத்தன்மைக்கு மட்டுமல்ல, பொருளாதார நிலைத்தன்மைக்கும் ஒரு பெரும் சோதனையாக அமையும். ஒரு நீடித்த நெருக்கடிக்கு 60 நாட்கள் தயாரிப்பு போதுமானதா என்பதே கேள்வி.
Latest Videos

