MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஆரம்பமே அமர்க்களம்.. சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் அதிவேக ரயில் பாதை

ஆரம்பமே அமர்க்களம்.. சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் அதிவேக ரயில் பாதை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் சென்னை-ஐதராபாத் உள்ளிட்ட 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 01 2026, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : X

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். 10 பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய் சாதனையை நிர்மலா சீதாராமன் நெருங்கி வருகிறார்,

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : Asianet News

பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு அதிரடி சரவெடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அதாவது நாடு முழுவதும் மொத்தம் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை – ஐதராபாத், பெங்களூரு – சென்னை, புனே – ஐதராபாத், மும்பை - புனே, டெல்லி – வாரணாசி, வாரணாசி – சிலிகுரி , ஐதராபாத் – பெங்களூரு உள்ளிட்ட அதிவேக ரயில் சேவைகள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

33
Image Credit : our own

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். பொது போக்குவரத்துக்கு நாடு முழுவதும் 20 நீர்வழித் தடங்கள் அமைக்கப்படும். ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த 'மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்' என்ற புதிய திட்டம். 3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத்தின் ஜாம்நகரில் அமைக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என அறிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பட்ஜெட் 2026
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இந்த சிறப்பு ரயில்களில் சீட் காலியா இருக்கு!
Recommended image2
DA Hike Good News: அகவிலைப்படி 63% ஆகிறதா? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! மாத சம்பளத்தில் எவ்வளவு கூடும்?
Recommended image3
VDA Hike: குறைந்தபட்ச ஊதியம் ரூ.1,111.! அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிய சம்பளம்.! அதிரடியாக உயர்ந்த VDA!
Related Stories
Recommended image1
Budget 2026: சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் புரட்சி.! வழிகாட்டிகளாக மாறும் கன்டென்ட் கிரியேட்டர்கள்!
Recommended image2
ரூ.5 லட்சம் வரை வரி இல்லையா? வருமான வரியில் அரசு செய்யப் போகும் அதிரடி மாற்றம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved