- Home
- இந்தியா
- Cancellation Charges: விமான டிக்கெட் ரத்து செய்தால் ஏன் இவ்வளவு கட்டணம்? மத்திய அரசு அதிரடி.. பயணிகள் குஷி
Cancellation Charges: விமான டிக்கெட் ரத்து செய்தால் ஏன் இவ்வளவு கட்டணம்? மத்திய அரசு அதிரடி.. பயணிகள் குஷி
Cancellation Charges: ஆன்லைன் விமான முன்பதிவு தளங்கள், விமான நிறுவனங்களை விட கூடுதல் ரத்துக் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விமான டிக்கெட் ரத்து கட்டணம்
விமான டிக்கெட் முன்பதிவு செய்வது இன்று சில நிமிடங்களில் முடிந்துவிடும் வேலை. ஆனால் அதையே ரத்து செய்யும் நேரத்தில் பயணிகளுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுகின்றனவா என்ற கேள்வி மீண்டும் தேசிய அளவில் விவாதமாகியுள்ளது. ஆன்லைன் விமான முன்பதிவு தளங்கள் கூடுதல் ரத்துக் கட்டணம் வசூலிக்கின்றன என்ற டிக்கெட் புகார்களைத் தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஆன்லைன் புக்கிங்
முன்பதிவு தளங்கள் வசூலிக்கும் கட்டணம் மற்றும் விமான நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணம் இடையே உள்ள வேறுபாடு உள்ளதா என்பதை ஆய்வு செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு நேரத்தில் காட்டப்படும் விதிமுறைகள், ரத்து செய்யும் நேரத்திலும் அதேபடி பின்பற்றப்படுகிறதா என்பது இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக உள்ளது.
நுகர்வோர் உரிமை
இந்த நடவடிக்கைக்கு காரணமானது ஒரு பயணியின் அனுபவமாகும். தவறுதலாக வேறு நகரத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதை ரத்து செய்தபோது ஆன்லைன் தளம் ஆயிரக்கணக்கில் கட்டணம் பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே டிக்கெட்டுக்கான ரத்துக் கட்டணம் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் மிகவும் குறைவாக இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியது.
மத்திய அரசு விசாரணை
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 கீழ், இத்தகைய நடைமுறைகள் நியாயமற்ற வர்த்தக முறையாக கருதப்படலாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குழு வழக்குகள் உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் புகார்
இதற்கிடையில், உலகளாவிய எரிபொருள் விலை மாற்றம் மற்றும் விமானத் துறையின் அதிகரிக்கும் செலவுகள் ஏற்கனவே நிறுவனங்களுக்கு அழுத்தமாக உள்ளன. இருப்பினும், அந்த நிதிச் சுமை நேரடியாக பயணிகள்மீது மறைமுக கட்டணமாக விழுகிறது என்ற கேள்விக்கான பதிலை இந்த விசாரணை வெளிச்சமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

