அதானி மகன் ஜீத் அதானி எடுத்த அதிரடி முடிவு; ஒருவருக்கு ரூ. 10 லட்சம் பரிசு!!
Jeet Adani Wedding Pledge: கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய்மின் ஷாவை நாளை (பிப்ரவரி 7ஆம் தேதி) அகமதாபாத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதற்கு முன் ஜீத் அதானி எடுத்த உறுதிமொழி தந்தை கவுதம் அதானியை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

அதானி மகன் ஜீத் அதானி திருமணம்
கோடீஸ்வரரான கௌதம் அதானி திருமணத்துக்கு முன் எடுத்த உறுதிமொழியால் மிகவும் பெருமிதம் அடைவதாகத் தெரிவித்துள்ளார். அவரது இளைய மகன் ஜீத் அதானி ஆண்டுதோறும் 500 மாற்றுத்திறனாளி மணப்பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நன்கொடை அளிப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஜீத் அதானி, திவா ஜெய்மின் ஷா
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அகமதாபாத்தில் திருமணம் நடைபெறுவதற்கு முன்பு, ஜீத் அதானி மற்றும் அவரது வருங்கால மனைவி திவா ஜெய்மின் ஷா, இருவரும் 21 மாற்றுத்திறனாளி மணமக்களைச் சந்தித்து நிதியுதவி அளித்தனர் என்றும் அப்போது இந்த உறுதிமொழியை இருவரும் அறிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாற்றுத்திறனாளிகள்
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கவுதம் அதானி, தனது வருங்கால மருமகளின் மனிதநேயம் மிக்க உறுதிமொழி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார். இந்த மங்களகரமான சேவை, ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுத்திறனாளி மணமக்களின் குடும்பங்களில் மகிழ்ச்சி மற்றும் அமைதியைப் பரிசாக அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
மருமகளை பாராட்டிய கவுதம் அதானி
"எனது மகன் ஜீத்தும் மருமகள் திவாவும் தங்கள் திருமண வாழ்க்கையை ஒரு புனிதமான தீர்மானத்துடன் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஜீத்தும் திவாவும் ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுத்திறனாளி சகோதரிகளின் திருமணத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கி, 'மங்ககரமான சேவை' செய்வதாக உறுதி அளித்துள்ளனர். ஒரு தந்தையாக, இந்த 'மங்கள சேவை' எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது" என்று கௌதம் அதானி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜீத் அதானி திருமணம்
"இந்த புனிதமான முயற்சியின் மூலம், பல மாற்றுத்திறன் மணப்பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதியை அடைவதுடன் அவர்களின் வாழ்க்கைத்தரமும் முன்னேறும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த சேவைப் பாதையில் தொடர்ந்து முன்னேற ஜீத் மற்றும் திவாவுக்கு ஆசீர்வாதங்களையும் பலத்தையும் வழங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனவும் அதானி தெரிவித்துள்ளார்.