விமான விபத்து புதிய திருப்பம்.! இது தான் காரணமா.? பைலட் குரல் பதிவில் வெளியான ஷாக் தகவல்
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையில், எரிபொருள் துண்டிப்பு ஸ்விட்சுகள் தற்செயலாக நகர்த்தப்பட்டது தெரியவந்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து
உலகத்தையே அதிர வைத்த விமான விபத்து அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தாகும். அந்த வகையில் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட சில நொடிகளில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விமானம், ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர், புறப்பட்டு 30 வினாடிகளுக்குப் பிறகு உயரம் இழந்து, அகமதாபாதில் உள்ள BJ மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில், விமானத்தில் பல கனவுகளோடு பயணம் செய்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விடுதி மற்றும் அருகில் இருந்த மேலும் 19 பேர் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர், இந்த விபத்தில் ஒரே ஒரு பயணி, விஸ்வாஷ்குமார் ரமேஷ், உடைந்த விமான பாகத்தின் வழியாக தப்பினார்.
விமான விபத்திற்கு காரணம் என்ன.?
இந்த நிலையில் விமான விபத்து தொடர்பாக பல கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்தது. அந்த வகையில் தற்போது 15 பக்க விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது அதில், அகமதாபாத்தில் ஏர் இந்தியா AI171 விபத்து குறித்த விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB) தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, 15 பக்க முதற்கட்ட அறிக்கையைப் பெற்றுள்ளதாக ஏர் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் AAIB மற்றும் பிற அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. AAIB மற்றும் பிற அதிகாரிகளின் விசாரணை தொடரும்போது, நாங்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிப்போம்," என்று ஏர் இந்தியா X பதிவில் தெரிவித்துள்ளது.
விமான விபத்து- விமானிகள் பேசிய என்ன.?
விபத்து தொடர்பாக ஏர் இந்தியா கூறுகையில், விசாரணை நடந்து கொண்டிருப்பதால், குறிப்பிட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என மறுத்துவிட்டது. இந்த நிலையில் ஏர் இந்தியா விமானம் விபத்து தொடர்பான வெளியாகியுள்ள முதல் கட்ட அறிக்கையில் விமானம் புறப்பட்ட 90 வினாடிகளுக்குள் நடந்த நிகழ்வுகளை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. விமானம் மேலே செல்லும் போது இரு என்ஜின்களும் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டதால், உந்துதல் இழப்பு ஏற்பட்டு விரைவாக விழுந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விமானத்தின் மேம்படுத்தப்பட்ட ஏர்போர்ன் ஃப்ளைட் ரெக்கார்டரில் (EAFR) இருந்து மீட்டெடுக்கப்பட்ட விமானத் தகவல்களில் , இரு என்ஜின்களுக்கான எரிபொருள் துண்டிப்பு ஸ்விட்சுகள் தற்செயலாக RUN இலிருந்து CUTOFF-க்கு நகர்த்தப்பட்டதாக தெரியவந்ததுள்ளது.
எரிபொருள் தடை
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் 1 வினாடி இடைவெளியில் இது சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு விமானி மற்றவரிடம், "ஏன் துண்டித்தீர்கள்?" என்று கேட்டதற்கு, "நான் செய்யவில்லை" என்று பதில் அளித்த குரல் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக விமானம் மேலே பறக்க முடியாமல் உயரத்தை இழக்கத் தொடங்கியது. மேலும் விமானம் பறக்கும் நிலையை தக்க வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. AAIB அறிக்கையின் படி, இரு என்ஜின்களையும் மீண்டும் இயக்க விமானிகள் எரிபொருள் ஸ்விட்சுகளை மீண்டும் இயக்கியுள்ளனர்
முதலாவது என்ஜின் மீண்டும் இயங்குவதற்கான அறிகுறிகளைக் காட்டியது. ஆனால் இரண்டாவது என்ஜின்அதனை நிலைப்படுத்தத் தவறிவிட்டது. 180 knots வேகத்தை எட்டிய விமானம் மேலே இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. உயரத்தை மீண்டும் பெறத் தவறிவிட்டது. கடைசி நேரத்தில் இறுதி அழைப்பாக -- "MAYDAY" என விமானி UTC தகவல் அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் விமானம் விமான நிலையத்திற்கு வெளியே உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் மோதுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு இது நடந்துள்ளது. விபத்து தொடர்பாக இறுதி அறிக்கை விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.