ரூ.10,000க்கு 4 ஏக்கர் நிலம்.. சொந்தமாக்க சூப்பர் சான்ஸ்.! எங்கே தெரியுமா.?
Farmer innovative plan : 4 ஏக்கர் நிலத்தை வெறும் 10ஆயிரத்திற்கு விற்பனை செய்ய விவசாயி ஒருவர் நூதன திட்டத்தை அறிவித்துள்ளார். ரூ.10,000 செலுத்தி டோக்கன் பெறுபவர்களில் ஒருவருக்கு இந்த நிலம் ஜாக்பாட்டாக கிடைக்கும்.

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது அனைவரின் கனவாகும், அதிலும் குறைந்த விலையில் கிடைத்தால் கேட்கவா வேண்டும். போட்டிப்போட்டு நிலத்தை வாங்குவார்கள். அதே நேரத்தில் விலை போகாத தனது நிலத்தை அதிக விலைக்கு விற்கவும் ஒரு சிலர் பல வித ஆசையை தூண்டுவார்கள்.
அப்படி தான் மஞ்சிரியால் மாவட்டத்தைச் சேர்ந்த பீமேஷ் என்ற விவசாயிக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. பணத் தேவைக்காக நிலத்தை விற்க முடிவு செய்தார். ஆனால், பலரும் குறைவான விலைக்கே பீமேஷை அனுகியுள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த விவசாயி, தனது நிலத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய நூதன முடிவை எடுத்தார். அந்த வகையில் நிலத்தை வாங்க சந்தை விலை சரியாக இல்லாததால், ரூ.10,000 செலுத்தி 4 ஏக்கர் நிலத்தை வெல்லும் ஜாக்பாட் வாய்ப்பை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பீமேஷ் கூறுகையில், நிலத்தை வாங்க விருப்புபவர்கள் குலுக்கலில் பங்கேற்கலாம் எனவும், ரூ.10,000 செலுத்தினால், ஒரு டோக்கன் வழங்கப்படும். மொத்தம் 1500 டோக்கன்கள் விற்ற பிறகே குலுக்கல் நடத்தப்படும் என அந்த விவசாயி கூறியுள்ளார்.
இந்த குலுக்கல் விவரங்கள் அடங்கிய பெரிய விளம்பர பிளெக்ஸை பீமேஷ் தனது வயலில் வைத்துள்ளார். நிலத்தின் சர்வே எண்கள், வழித்தடம், கட்டண முறைகள் போன்ற விவரங்களும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
இதனையடுத்து ஏராளமானோர் 10 ரூபாய் செலுத்தி டோக்கனை பெற்று வருகிறார்கள், இந்த குலுக்கல் மூலம், விவசாயிக்கு தனது நிலத்தின் விற்பனை விலையை விட பல மடங்கு லாபம் கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள். 1500 பேர் தலா ரூ.10,000 செலுத்தினால், மொத்தம் ரூ.1.5 கோடி கிடைக்கும்.
அதே நேரம் நிலம் தொடர்பான குலுக்கல் தேதி, பதிவு செயல்முறை, நில உரிமை மாற்றம் போன்றவற்றில் தெளிவு இல்லாததால், சிலர் இந்த சலுகை மீது சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால், நவம்பரில் நிலத்தை விற்பனை செய்வதற்கான குலுக்கல் தேதி அறிவிக்கப்படும் என பீமேஷ் கூறியுள்ளார்..