- Home
- இந்தியா
- மதுர காரன் டா போல இனி கோவைக்காரன்டா..! சிபிஆர் ஆல் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் கோவையன்ஸ்..
மதுர காரன் டா போல இனி கோவைக்காரன்டா..! சிபிஆர் ஆல் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் கோவையன்ஸ்..
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி தேர்தலில் NDA சார்பில் போட்டியிடுகிறார். பாஜகவின் பலத்தால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது, இன்று மாலை முடிவுகள் வெளியாகும்.

நாட்டின் மிக உயரிய பதவிகளில் இரண்டாவது பதவி தான் துணை ஜனாதிபதியாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்தபடியாக உள்ளது குடியரசுத் துணைத் தலைவர் பதவி, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் அலுவல் வழித் தலைவராக செயல்படுகிறார். மாநிலங்களவையில் ஓட்டுகள் சமநிலையில் இருக்கும்போது மட்டுமே இவர் முடிவு தீர்மானிக்கும் ஓட்டு (Casting Vote) அளிக்க முடியும்,
குடியரசுத் துணைத் தலைவர் பிற நாடுகளுடனான ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் குடியரசுத் துணைத் தலைவரின் அதிகாரங்கள் முக்கியமாக மாநிலங்களவையை நிர்வகிப்பதிலும், குடியரசுத் தலைவர் இல்லாத சூழலில் தற்காலிகமாக அப்பொறுப்பை ஏற்பதிலும் அடங்கும்.
இந்த நிலையில் தான் தமிழகத்தை சேர்ந்தவர் ஒருவர் நாட்டின் உயரிய பதவியை அடையவுள்ளார். அந்த வகையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போல வெங்கட்ராமன் போல, ப சிதம்பரம், நிர்மலா சீதாராமன் போல இந்திய அளவில் கோயம்புத்தூரில் இருந்து யாரும் பெரிய அளவில் பிரகசிக்கவில்லை.
அந்த வகையில் இதற்கு முன்பாக கோவையில் இருந்து சண்முகம் செட்டியார் நிதி அமைச்சராக இருந்தார். தற்போது கோவை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் வகையில் கோவையை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக தேர்வாகவுள்ளார். 2023-2024 இல் ஜார்க்கண்ட் ஆளுநராகவும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்புகளை சி.பி.ராதாகிருஷ்ணன் வகித்துள்ளார்.
ஏற்கனவே சி.பி.ராதாகிருஷ்ணன் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இரு முறை எம்.பி.யாக வெற்றி பெற்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் (67), தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமானவர் களத்தில் உள்ளார். இந்தியா கூட்டணி (INDIA)சார்பில் பி. சுதர்சன் ரெட்டி (79), தெலங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் போட்டியில் உள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்றைய தேர்தலில் பாஜகவின் பலத்தால் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே உள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு வாக்கு பதிவு முடிவடைந்த பின்னர். வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தமாக 782 எம்.பி வாக்குகள் மட்டுமே வாக்களிக்க உள்ளதால் மாலை 7 முதல் 8 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போதே தமிழகத்தில் உள்ள பாஜக அலுவலகங்களில் தற்போதே கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் தயாராகி வருகிறது.