- Home
- இந்தியா
- DIWALI GIFT : வெறும் ரூ.1க்கு 2GB டேட்டா, ஒரு மாத அன்லிமிடெட் கால்ஸ்- BSNL அசத்தல் பிளான் அறிவிப்பு
DIWALI GIFT : வெறும் ரூ.1க்கு 2GB டேட்டா, ஒரு மாத அன்லிமிடெட் கால்ஸ்- BSNL அசத்தல் பிளான் அறிவிப்பு
BSNL தீபாவளி ஆஃபர் 2025: வெறும் ரூ.1க்கு ஒரு மாதத்திற்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 60GB டேட்டாவைப் பெறலாம். இந்த ஆஃபர் BSNL வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

பிஎஸ்என்எல் தீபாவளி ஸ்பெஷல் ஆஃபர்
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் பொதுத்துறை நிறுவனமான BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) கடும் போட்டியளித்து வருகிறது. இந்த தீபாவளிக்கு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.1 ஆஃபர் என்றால் என்ன?
அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தீபாவளி போனான்ஸா சலுகை. BSNL-க்கு மாறும் புதிய பயனர்களுக்கு ரூ.1க்கு சிம், தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் இலவசம்.
பிஎஸ்என்எல் சில்வர் ஜூபிலி திட்டம்
BSNL தனது 25வது ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது. இதையொட்டி, ரூ.225-க்கு புதிய சில்வர் ஜூபிலி திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் 30 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், 2.5GB/நாள் டேட்டா கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.99 திட்டம்..
BSNL வழங்கும் ரூ.99 ரீசார்ஜ் திட்டம் 15 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. இணையப் பயன்பாடு இல்லாதவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
பிஎஸ்என்எல் ரூ.229 திட்டம்
BSNL-ன் ரூ.229 திட்டம் ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகிறது. இது அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2GB டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. டேட்டா தீர்ந்தாலும் வேகம் குறையும்.