MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • திருமணம் எப்போது? ராகுல் காந்தியிடம் குட்டி பையனின் கேள்வி.. பீகார் பிரசாரத்தில் சுவாரஸ்யம்

திருமணம் எப்போது? ராகுல் காந்தியிடம் குட்டி பையனின் கேள்வி.. பீகார் பிரசாரத்தில் சுவாரஸ்யம்

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு சிறுவன் ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டான். அதற்கு ராகுல் காந்தி, தனது வேலை முடிந்ததும் திருமணம் செய்துகொள்வதாக பதிலளித்தார்.

1 Min read
Author : SG Balan
Published : Nov 06 2025, 09:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ராகுல் காந்தியிடம் சிறுவன் கேட்ட கேள்வி
Image Credit : Asianet News

ராகுல் காந்தியிடம் சிறுவன் கேட்ட கேள்வி

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுவனுடன் உரையாடிய தருணம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்பும் கேள்வியை அந்தச் சிறுவன் நேரடியாகக் கேட்டிருக்கிறான்.

"நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?" என்று கேட்ட அந்தச் சிறுவன் கேட்பதும் ராகுல் காந்தி பதில் அளிப்பதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஆனால், வீடியோவில் ஒலி இல்லாததால், அவர்கள் பேசியதைக் கேட்க முடியவில்லை ஆனால், ராகுல் காந்தி தன்னிடம் சொன்ன பதிலை அந்தச் சிறுவன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தான்.

23
வேலை முடிந்ததும் திருமணம்
Image Credit : Asianet News

வேலை முடிந்ததும் திருமணம்

"நான் ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், 'தனது வேலை முடிந்ததும் திருமணம் செய்துகொள்வதாக' பதிலளித்தார்," என்று அந்தச் சிறுவன் கூறினான்.

ராகுல் காந்தியின் திருமணம் குறித்த கேள்விகள் சமீபகாலமாகத் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

Related Articles

Related image1
பயங்கர காமெடி.. H Files குறித்து வீடியோ வெளியிட்ட பிரேசில் மாடல் லாரிசா!
Related image2
ஹரியானாவில் மட்டும் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.. ECக்கு எதிராக பகீர் கிளப்பும் ராகுல் காந்தி
33
தீபாவளி கொண்டாட்டத்தின்போது
Image Credit : social media

தீபாவளி கொண்டாட்டத்தின்போது

கடைசியாகத் தீபாவளி கொண்டாட்டத்தின்போது பழைய டெல்லியில் உள்ள கண்டேவாலா இனிப்புக் கடையில் பாரம்பரிய இனிப்புகளைச் செய்துகொண்டிருந்தபோது, கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் விளையாட்டுத்தனமாக ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்றும், திருமண இனிப்பு ஆர்டர் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்ட தரவுகளின்படி, மாலை 5 மணி நிலவரப்படி பீகாரில் முதல் கட்டமாக 60.13% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ராகுல் காந்தி
இந்தியா
இந்திய தேசிய காங்கிரஸ்
திருமணம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் இந்திய அஞ்சல் துறை..! 24 மணி நேரத்தில் டெலிவரி..
Recommended image2
LPG Cylinder: கேஸ் சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி வரலையா? டீலர் அதிக காசு கேட்கிறாரா? இத பண்ணுங்க போதும்!
Recommended image3
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை
Related Stories
Recommended image1
பயங்கர காமெடி.. H Files குறித்து வீடியோ வெளியிட்ட பிரேசில் மாடல் லாரிசா!
Recommended image2
ஹரியானாவில் மட்டும் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.. ECக்கு எதிராக பகீர் கிளப்பும் ராகுல் காந்தி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved