பொன்னியின் செல்வன் பட பாடகியை திருமணம் செய்யும் பாஜக எம்பி.! யார் தெரியுமா.?
பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.பி. தெஜஸ்வி சூர்யாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பாடகி மற்றும் பரதநாட்டியக் கலைஞரான சிவஸ்ரீ ஸ்கந்தகுமாரை மணக்கவுள்ளார்.
Tejasvi Surya
பாஜகவின் இளம் எம்.பி
பா.ஜ.க-வின் 'இளம் மற்றும் துடிப்பான' எம்.பி. என்று அழைக்கப்படும் தெஜஸ்வி சூர்யா, பெங்களூரு தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், தமிழக பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலையின் நெருங்கிய நண்பர் ஆவார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் எப்போது திருமணம் என்ற கேள்வி பல முறை எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு எந்த வித பதிலும் அளிக்காமல் மவுனம் காத்து வந்தார்.
தெஜஸ்விக்கு திருமணம் எப்போது.?
பல சந்தர்ப்பங்களில் தெஜஸ்வி சூர்யாவிடம் திருமணம் பற்றி கேட்டபோதும், அவர் இந்த விஷயம் பற்றி வாய் திறக்கவில்லை, ஆனால் இப்போது அவர் அமைதியாக திருமணத்திற்குத் தயாராகி வருகிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. எம்.பி. தெஜஸ்வி சூர்யா சென்னையைச் சேர்ந்த பாடகி மற்றும் பரதநாட்டியக் கலைஞரான ஸ்கந்தகுமாரை மணக்க இருக்கிறார்.
சென்னை பெண்ணை திருமணம் செய்யும் தெஜஸ்வி
பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தெஜஸ்வி சூர்யாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பாடகி சிவஸ்ரீயை அவர் மணக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2025ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து சூர்யா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மார்ச் 4ஆம் தேதி திருமணம்
திருமணம் தொடர்பாக ஏற்கனவே தெஜஸ்வி சூர்யா மற்றும் சிவஸ்ரீ ஸ்தந்த பிரசாத் ஆகியோரின் இரு குடும்பங்களும் பேசி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதன் படி வருகிற மார்ச் 4 ஆம் தேதி திருமணம் பெங்களூரில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Ponniyin Selvan
யார் இந்த சிவஸ்ரீ ஸ்தந்த பிரசாத்
சிவஸ்ரீ ஸ்தந்த பிரசாத் ஒரு கர்நாடக இசைப் பாடகி மற்றும் பரதநாட்டியக் கலைஞர். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். இதனுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ பட்டமும், சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
சைக்கிளிங், டிரெக்கிங், நடைப்பயணம் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவர். பொன்னியின் செல்வன் - பாகம் 2 இன் கன்னட பதிப்பிற்காக ஹெல்கே நீனு பாடலையும் பாடியிருந்தார் .சிவஸ்ரீயின் யூடியூப் சேனலில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.