- Home
- இந்தியா
- பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சிமைக்க வாய்ப்பு..! எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் அதிரடி...!
பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சிமைக்க வாய்ப்பு..! எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் அதிரடி...!
பீகார் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. இப்போது தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

பீகாரில் 2025 சட்டமன்றத் தேர்தல் அதன் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று, நவம்பர் 11 அன்று முடிவடைந்த நிலையில், அங்கு கடுமையாக ஏற்பட்ட போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் வாக்காளர்கள் நாள் முழுவதும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர், தீவிரமான பேரணிகள், கூர்மையான அரசியல் பிரச்சாரங்கள், அதிக வாக்குப்பதிவு ஆகியவற்றால் அங்கு தேர்தல் விறு விறுஒப்பாக நடந்து முடிந்துள்ளது.
பீகார் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. இப்போது தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில், பி-மார்க் எக்ஸிட் போல் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளது. என்.டி.ஏ கூட்டணி 142-162 இடங்களைப் பிடித்து மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி 80-98 இடங்களைப் பெறும் என்றும் கணித்துள்ளது. இந்த எக்ஸிட் போல் பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சிக்கு 1-4 இடங்கள் கிடைக்கலாம் எனக்கூறி உள்ளது. மற்றவை 0-3 இடங்களைப்பிடிக்கலாம் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பில் என்.டி.ஏ 135 முதல் 150 தொகுதிகளில் வெள்ளி பெறலாம் எனவும் இண்டியா கூட்டணி 88 முதல் 103 தொகுதிகள் வெற்றி வாய்ப்பை பெறும் எனவும் கூறப்பட்டுள்ளடு. ஜன்சுராஜ் 0-1 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக்கூறியுள்ளது.
மேட்ரிஸ் கருத்துக் கணிப்பில் என்.டி.ஏ 147 முதல் 167 தொகுதிகளில் வெள்ளி பெறலாம் எனவும் இண்டியா கூட்டணி 70 முதல் 90 தொகுதிகள் வெற்றி வாய்ப்பை பெறும் எனவும் கூறப்பட்டுள்ளடு. ஜன்சுராஜ் 0-2 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக்கூறியுள்ளது.
பியூப்பில் ப்ளஸ் கருத்துக் கணிப்பில் என்.டி.ஏ 133 முதல் 159 தொகுதிகளில் வெள்ளி பெறலாம் எனவும் இண்டியா கூட்டணி 75 முதல் 101 தொகுதிகள் வெற்றி வாய்ப்பை பெறும் எனவும் கூறப்பட்டுள்ளடு. ஜன்சுராஜ் 0-5 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக்கூறியுள்ளது.