இந்தியாவின் ஸ்டார்ட்அப் தலைநகரமாக மாறிவரும் பெங்களூரு!
Bengaluru AI Startups: குறைந்த செலவுகள் மற்றும் திறமையான மக்கள் தொகையுடன், பெங்களூரு ஸ்டார்ட்அப்களுக்கு சான் பிரான்சிஸ்கோவை விட சிறந்த இடமாக மாறி வருகிறது. AI ஸ்டார்ட்அப்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை, பெங்களூருவின் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது.

Bengaluru Startups
இந்தியாவின் சிலிக்கான் வேலி:
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு, உலகம் முழுவதும் ஸ்டார்ட்அப்களுக்கு மிகவும் பிடித்த இடமாக மாறி வருகிறது. குறைந்த வாழ்க்கைச் செலவுகள், திறமையான மக்கள் மற்றும் வளர்ந்து வரும் முதலீட்டு வாய்ப்புகள் காரணமாக, சான் பிரான்சிஸ்கோ போன்ற பெரிய நகரங்களை விட இங்கு தங்கள் நிறுவனங்களைச் சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும் என பல நிறுவனர்கள் கருதுகின்றனர்.
Startups in Bengaluru
ஸ்டார்ட்அப் வளர்ச்சி:
“உங்கள் ஸ்டார்ட்அப் சான் பிரான்சிஸ்கோவை விட பெங்களூருவில் ஐந்து மடங்கு நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும்,” என்று முதலீட்டாளர் நிக் லின்க் கூறுகிறார். வாடகை மற்றும் இதர செலவுகளுக்கு மாதத்திற்கு சுமார் 500 டாலர் மட்டுமே செலவாகும் நிலையில், பெங்களூருவில் உள்ள ஸ்டார்ட்அப்கள் அதிக பணம் செலவழிக்காமல் வளர வாய்ப்பு கிடைக்கிறது.
Investments in Bengaluru
10 பில்லியன் டாலர் மூலதனம்:
2020ஆம் ஆண்டில், பெங்களூரு 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான மூலதனத்தை ஈட்டியது. இது சான் பிரான்சிஸ்கோ மற்றும் லண்டனை விடவும் அதிகம். அந்த வளர்ச்சி இன்னும் தொடர்கிறது. பிரபல தொழில்நுட்ப குழுமமான சவுத் பார்க் காமன்ஸ், பெங்களூருவில் தனது மூன்றாவது சர்வதேச அலுவலகத்தைத் திறந்திருக்கிறது. இது பெங்களூருவின் தொழில்நுட்ப எதிர்காலம் குறித்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
Artificial Intelligence
AI ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்:
ஒரு காலத்தில் சந்தேகம் கொண்டிருந்த ஹர்தீப் கம்பீர் போன்றவர்கள் இப்போது பெங்களூருவுக்கு வந்துவிட்டனர். பெங்களூருவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களில் ஆர்வம் காட்டுகின்றனர். செயற்கை நுண்ணறிவு (AI) துறையும் சிறப்பாக வளர்ந்து வருகிறது. Sarvam AI, KOGO OS, Krutrim AI, Karya AI போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குகின்றன. ஸ்மார்ட் அசிஸ்டெண்ட் முதல் கிராமப்புற மக்களுக்கு உதவும் கருவிகள் வரை பல நவீன வசதிகளைக் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.
AI Startups in Bengaluru
பெங்களூருவுக்கு அப்பால்:
கர்நாடக டிஜிட்டல் பொருளாதார மிஷனின் தலைவர் சஞ்சீவ் குமார் குப்தா, “பெங்களூரில் 1,000க்கும் மேற்பட்ட AI ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன” என்று சொல்கிறார். கர்நாடகாவின் 'பெங்களூருக்கு அப்பால்' என்ற திட்டம் மூலம் பெங்களூரு மட்டுமின்றி, மைசூர், ஹூப்ளி, மங்களூரு போன்ற நகரங்களும் புதிய தொழில்நுட்ப மையங்களாக மாறி வருகின்றன. இந்த நகரங்கள் ஒன்றிணைந்து உலகாளாவிய ஸ்டார்ட்அப் சந்தையில் கர்நாடகாவுக்கு முக்கிய இடத்தை அளிக்கின்றன.