அடேங்கப்பா! ஜாமீனில் வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்னும் இவ்வளவு சொத்து இருக்கா!
மதுபான ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு 2015-ம் ஆண்டு முதல் ரூ.1.30 கோடி அதிகரித்துள்ளது. அவருடைய சம்பளம் மற்றும் சொத்துக்கள் பற்றி இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
மதுபான ஊழல் குற்றச்சாட்டில் 4 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த கெஜ்ரிவால், தற்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய முதல்வராக அமைச்சர் அதிஷியை ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்துள்ளது. விரைவில் அவர் பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்து கெஜ்ரிவால் இதுவரை எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார், முதல்வர் பதவியில் அவருக்கு என்ன சம்பளம், அரசாங்கத்திடம் இருந்து என்னென்ன வசதிகளை அனுபவித்தார் என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது.
முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலின் மாதச் சம்பளம் ரூ.4 லட்சம். இது தவிர அரசு பங்களா, கார், ஓட்டுநர் உள்ளிட்ட வசதிகள் அரசு சார்பில் அவருக்கு வழங்கப்பட்டன. அதே நேரத்தில், கெஜ்ரிவாலின் பாதுகாப்பு, வீட்டு செலவுகள் மற்றும் பயணம் போன்ற செலவுகளையும் அரசே பார்த்துக்கொண்டது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவருக்கு எம்.எல்.ஏ.க்கு உரிய சம்பளம் மற்றும் சலுகைகள் அரசிடம் இருந்து தொடர்ந்து கிடைக்கும்.
kejriwal
2020ஆம் ஆண்டு, டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் தனது சொத்துக்கள் குறித்த பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். அதன்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.3.44 கோடி. இதற்கு முன், 2015 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.2.1 கோடி என அறிவித்திருந்தார். இரண்டையும் ஒப்பிட்டால், அவரது சொத்து மதிப்பு ரூ.1.30 கோடி அதிகரித்துள்ளது. இது தவிர, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்த வீடு அல்லது கார் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு குருகிராமில் ரூ. 1 கோடிக்கு மேல் மதிப்புள்ள பங்களா உள்ளது. அதை அவர் 2010இல் ரூ. 60 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.
Arvind Kejriwal weight loss due to diabetes
மாதம் ரூ.4 லட்சம் சம்பாதித்து, அரசு செலவில் பல வசதிகளை அனுபவித்தாலும், அவரது கணக்கில் ரூ.12,000 மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி கணக்கில் ரூ.9,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் குடும்பத்தில் மொத்தம் 6 கணக்குகள் உள்ளன. அதில் மொத்தம் ரூ.33 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள எவருக்கும் எந்தவிதமான கடன்களும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவிடம் சுமார் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கமும், ரூ.15 லட்சம் மியூச்சுவல் ஃபண்டும் முதலீடும் உள்ளது.