- Home
- இந்தியா
- எலிப்பொறியில் சிக்கிய எடப்பாடி ..! செந்தில் பாலாஜியுடன் கைகோர்த்த அண்ணாமலை..? உருவாகிறது கொங்கு ஜனதா கட்சி..!
எலிப்பொறியில் சிக்கிய எடப்பாடி ..! செந்தில் பாலாஜியுடன் கைகோர்த்த அண்ணாமலை..? உருவாகிறது கொங்கு ஜனதா கட்சி..!
‘‘அண்ணாமலை தனி கட்சி ஆரம்பிப்பதற்கு திமுகவின் ஆதரவு உண்டு. ஏனென்றால் எடப்பாடியாரை அடிக்க வேண்டும். எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை. எதிரிக்கு ரெண்டு கண் போக வேண்டும் என்று நினைப்பவர்தான் அண்ணாமலை’’

அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து கழற்றிவிடப்பட்டு யாரும் கண்டுகொள்ளாத ஒரு நிலை ஏற்பட்டதற்கு காரணமே எடப்பாடிதான் என அவர் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதே போல தனது அரசியல் வாழ்க்கைக்கு எடப்பாடி மிகப்பெரிய இடையூறாக இருக்கிறார் என்பதை அண்ணாமலை நன்றாக உணர்ந்து இருக்கிறார். ஆகையால்தான் தான் பதவியில் இருந்தபோது, இல்லாத இப்போதும் எடப்பாடிக்கு எதிராக கிடைக்கிற கேப்பில் எல்லாம் கிடாய் வெட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
நான் பதவியில் இல்லை. கூட்டணி விவகாரம் குறித்து நான் பேச மாட்டேன். பேசவே மாட்டேன். வேறு தலைவர் வந்துவிட்டார். அவரிடத்தில் கேட்டு கொள்ளுங்கள் என சொல்லி வந்த அண்ணாமலை, எடப்பாடியார் விஷயம் கிடைத்தால் இரண்டு குத்தை குத்தி விட்டுத்தான் செல்கிறார். எடப்பாடியார் ஒன்றும் அதிமுகவின் ஓனர் கிடையாது. உங்கள் கடையின் ஓனர் எங்கள் அமித்ஷா ஜி தான். எதுவாக இருந்தாலும் அவரிடம் கேளுங்கள். அவர் சொல்வதை மட்டும் கேளுங்கள். அவர் சொல்வதுதான் கூட்டணியில் நடக்கும் என்கிறார் அண்ணாமலை. ஒரே கவுண்டர் இனமாக இருந்தாலும் அண்ணாமலைக்கு மூன்றுபேர்தான் மிகப்பெரிய எதிரிகள்.
முதல் எதிரி எடப்பாடி பழனிச்சாமி. இரண்டாவது எதிரி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி. காங்கிரஸ், செந்தில் பாலாஜி, திமுக எல்லாம் அதற்கு அடுத்துத்தான். அண்ணாமலை கொள்கை என்று வந்துவிட்டால் தன் ஜாதிக்கரனாக இருந்தாலும் சரி, தன் ஊர்காரனாக இருந்தாலும் சரி, தனது பகுதியான கொங்கு மண்டலத்துக்காரனாக இருந்தாலும் சரி. என்றால் சரி, தப்பு என்றால் தப்புதான். அந்த வகையில் தனக்கு எதிராக வெல்லமண்டி நடராஜனை வைத்து உள்குத்து வேலை செய்த எடப்பாடி பழனிச்சாமியை மொத்தமாக அரசியலை விட்டு ஒழித்து கட்ட வேண்டும் என கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறார்.
இத்தனைக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலைக்கு சித்தப்பா முறை. ஆனாலும், எடப்பாடியாருக்கு எதிராக நீயா, நானா? என பார்த்துக் கொள்ளலாம் வா என்று தீவிரம் காட்டி வருகிறார் அண்ணாமலை. தனக்கு முதலமைச்சர் அந்தஸ்து கொடுத்தும் சசிகலாவுக்கே துரோகம் செய்தார் எடப்பாடி. அப்படிப்பட்ட சசிகலாவே எடப்பாடியாரின் துரோகத்தை அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என மறந்து விட்டார். டி.டி.வி.தினகரன் கூட, ‘‘ஒரு காலத்தில் தங்களிடம் நின்று கைகட்டி வாய்ப்பு கேட்டார். அரசியல் சூழலால் இன்று பெரிய ஆள் ஆகிவிட்டார்’’ என பழசை மறந்து எடப்பாடி பழனிச்சாமியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். ஆனால் இப்போதும் எடப்பாடியார் மீது வெறியோடு இருக்கிற ஒரே ஆள் அண்ணாமலை.
அவரை அரசியலை விட்டே அப்புறப்படுத்தியாக வேண்டும். கூட்டணியை விட்டு விரட்டி விட்டியாக வேண்டும். அதிமுகவில் இருந்து எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பியாக வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார். அண்ணாமலை அதிமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. அண்ணாமலையின் குடும்பத்தினர் அதிமுகவை நேசிக்க கூடியவர்கள். அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான் டார்கெட். தான் அடியோடு ஒழிந்தாலும் பரவாயில்லை. அரசியலை விட்டே போனாலும் பரவாயில்லை. எடப்பாடியார், ஜோதிமணி, செந்தில் பாலாஜி போன்றவர்களை எல்லாம் ஒழித்துவிட்டுப் போக வேண்டும். இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி என்கிற ஒருத்தரை ஒழித்து விட்டால்கூட பரவாயில்லை’ என்கிற எண்ணம் அண்ணாமலை மனதில் ரணமாக பதிந்து விட்டது என்கிறார்கள் அவரை முழுமையாக அறிந்தவர்கள்.
இந்தத் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க அண்ணாமலை, செந்தில் பாலாஜி போன்றவர்கள் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார் பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், ‘ ‘ அடுத்து அண்ணாமலை ஒரு கட்சி ஆரம்பிக்கப்போகிறார். கொங்குநாடு ஜனதா கட்சி. அது கொங்கு பகுதியில் மட்டும்தான் செயல்படும். கொங்கு மண்டலத்தில் எடப்பாடியா? அண்ணாமலையா? என்பதுதான் அங்கு அவர்களுக்குள் பிரச்சனை. அப்பகுதியில் மூன்று ஆப்ரேட்டர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜி.
அங்கு எடப்பாடி பழனிச்சாமியின் தளபதிதான் வேலுமணி. ஆனால், அந்த வேலுமணியை பாஜக ஹைஜாக் செய்து எடுத்துக்கொண்டது. வேலுமணி பிஜேபியின் தளபதியாக மாற்றிவிட்டார். எடப்பாடி பழனிசாமியா? அண்ணாமலையா? செந்தில் பாலாஜியா? என்று வருகிறபோது அண்ணாமலையும், செந்தில் பாலாஜியும் சேர்ந்து விட்டார்கள். எடப்பாடியை தனியாக விட்டுவிட்டார்கள். இந்த முறை எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அண்ணாமலை கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறார்.
என்னை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு நைனார் நாகேந்திரனை மாநில தலைவர் பதவியில் போட்டு அதிமுகவுடன் சேர்ந்தால் வெற்றி பெறுவோம் என்பது போல தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள். இப்படி இருக்கும்போது அந்தக் கூட்டணி வெற்றி பெறுவதை அண்ணாமலை விரும்பவில்லை. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த எல்லா கட்சிகளையும் அழைத்து வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தார். பாமக, ஜான்பாண்டியன், ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் என கூட்டணிக்கு அழைத்து வந்து 18 சதவீத வாக்குகளை வாங்கினார் அண்ணாமலை. இப்போது நான் வாங்கின 18 சதவீத வாக்குகளை சும்மா விட்டு விட முடியுமா? என நினைக்கிறார்.
அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத்தான் எடப்பாடி பழனிசாமி 19 சதவிகித ஓட்டு வாங்கினார். அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை, அண்ணாமலை ஜெயிக்க வைத்து விடுவாரா? இதில் அரிதான விஷயம் என்னவென்றால் எடப்பாடியை தோற்கடிக்க செந்தில் பாலாஜியுடன், அண்ணாமலையும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து அடிக்க இருப்பது எடப்பாடி பழனிச்சாமியை. அதனால்தான் தைரியமாக மு.க.ஸ்டாலின், எடப்பாடியின் தோல்வி கொங்கிலிருந்து ஆரம்பிக்கும் என்று கூறி இருந்தார்.
அண்ணாமலை தனி கட்சி ஆரம்பிப்பதற்கு திமுகவின் ஆதரவு உண்டு. ஏனென்றால் எடப்பாடியாரை அடிக்க வேண்டும். எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை. எதிரிக்கு ரெண்டு கண் போக வேண்டும் என்று நினைப்பவர்தான் அண்ணாமலை’’ என்கிறார் தாமோதரன் பிரகாஷ்.