MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்தியா முழுவதும் இனி 'வந்தே பாரத்' தான்; சாதாரண ரயில்கள் குறைப்பு? நடுத்தர மக்கள் ஷாக்!

இந்தியா முழுவதும் இனி 'வந்தே பாரத்' தான்; சாதாரண ரயில்கள் குறைப்பு? நடுத்தர மக்கள் ஷாக்!

வந்தே பாரத் ரயில்கள் அதிவேமாக செல்வதால் பயண நேரம் குறைந்து பயணிகள் பயனடைகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் இல்லை என்பதே உண்மை. 

2 Min read
Author : Rayar r
Published : Feb 02 2025, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா முழுவதும் இனி 'வந்தே பாரத்' தான்; சாதாரண ரயில்கள் குறைப்பு? நடுத்தர மக்கள் ஷாக்!

இந்தியா முழுவதும் இனி 'வந்தே பாரத்' தான்; சாதாரண ரயில்கள் குறைப்பு? நடுத்தர மக்கள் ஷாக்!

இந்தியாவில் தினம்தோறும் ரயில்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிமாக உள்ளது. பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான். 

நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். இந்தியாவில் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமின்றி, சதாப்தி, ராஜ்தானி, ஜன்சதாப்தி உள்ளிட்ட அதிவேக ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே நாட்டில் அதிவேகமாக செல்லும் 'வந்தே பாரத்' ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயிலுக்கு பயணிகள் மததியில் வரவேற்பு அதிகம் இருக்கும் நிலையில், அதிக ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
 

24
வந்தே பாரத் ரயில்கள்

வந்தே பாரத் ரயில்கள்

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இந்தியன் ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்தியாவில் இருக்கை வசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

இந்தியாவில் இப்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களே இயக்கப்படும் நிலையில், விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது தவிர 100 அமிர்த பாரத் மற்றும் 50 நமோ பாரத் ரயில் பெட்டிகள் வாங்கவும், ஏராளமான ரயில் உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய பட்ஜெட்டில்  ரூ.2.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அட! ரயில் பெட்டி எண்களில் இவ்வளவு ரகசியம் மறைந்திருக்கிறதா? முழு விவரம்!

34
வந்தே பாரத் ரயில் கட்டணம்

வந்தே பாரத் ரயில் கட்டணம்

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அதிவேமாக செல்வதால் பயண நேரம் குறைந்து பயணிகள் பயனடைகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் இல்லை. சாதாரண ரயில்களை விட இதில் பன்மடங்கு கட்டணம் அதிகமாக உள்ளதால் தொழில் அதிபர்கள், பணக்காரர்கள் மட்டுமே வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்ய முடிகிறது.

இது மட்டுமின்றி வந்தே பாரத் ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சாதாரண ரயில்களின் முக்கியத்துவத்தை ரயில்வே குறைத்து விட்டதாக சந்தேகமும் எழாமல் இல்லை. ஏனெனில் வந்தே பாரத் ரயில்கள் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் சாதாரண ரயில்கள் நீண்ட நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களீல் முதல் பிளாட்பாரம் ஒதுக்குதல் என பல்வேறு விஷயங்களில் மற்ற ரயில்களை விட வந்தே பாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.

44

இந்தியா முழுவதும் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படுவதால் சாதாரண படுக்கை வசதி கொண்ட ரயில்கள் குறைக்கப்படுமோ? என்ற அச்சம் நடுத்தர மக்கள் மனதில் எழுந்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகமாகியுள்ளன. இதனால் வந்தே பாரத் அதிகமாக வந்தால் சாதாரண ரயில்களின் எண்ணிக்கை குறையும் என்ற மக்களின் அச்சத்தை தவிர்க்க முடியவில்லை. 

உலகின் நீளமான ரயில்வே நெட்வொர்க்குகள்! இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved