- Home
- இந்தியா
- ரூ.2 லட்சத்துக்கு புரோட்டீன் பார் வாங்கிய பெங்களூர்வாசி.. இந்தியர்களின் புதிய உணவு பழக்கம் கொடுத்த ஷாக்!
ரூ.2 லட்சத்துக்கு புரோட்டீன் பார் வாங்கிய பெங்களூர்வாசி.. இந்தியர்களின் புதிய உணவு பழக்கம் கொடுத்த ஷாக்!
Instamart Report : இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், புரோட்டீன் உணவுகளின் தேவை கடந்த சில ஆண்டுகளில் 150% வரை அதிகரித்துள்ளது. சென்னை போன்ற நகரங்களில் ஆரோக்கியத்திற்காக மக்கள் அதிகம் செலவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

புரோட்டீன் உணவுகளில் இந்தியர்கள் புதிய டிரெண்ட்
தமிழகத்தில் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்து பேசும் மக்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மிகவும் உயர்ந்துள்ளது. ஒருகாலத்தில் ஜிம் செல்லும் சிலரின் தேர்வாக இருந்த புரோட்டீன் உணவுகள், இப்போது பொதுமக்களின் அன்றாட உணவு பட்டியலிலும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், துரித மளிகை விநியோக தளங்களில் புரோட்டீன் சார்ந்த பொருட்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய சந்தை அறிக்கைகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் புரோட்டீன் பொருட்களுக்கான ஆர்டர்கள் 150 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளன.

சென்னையிலும் அதிகரிக்கும் புரோட்டீன் ஆர்வம்
முன்பு பெருநகரங்களின் வாழ்க்கைமுறையாக கருதப்பட்ட இந்த ஆரோக்கிய பழக்கம், இப்போது இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் பரவி வருவது கவனிக்கத்தக்கது. பெங்களூரு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையும் இந்த மாற்றத்தில் பின்தங்கவில்லை. சென்னையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர், வேர்க்கடலை அடிப்படையிலான புரோட்டீன் பொருட்களுக்காக ஒரே ஆர்டரில் ரூ.2.7 லட்சத்துக்கு மேல் செலவு செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம், ஆரோக்கிய உணவுக்காக அதிகம் செலவிட தயாராக இருக்கும் புதிய தலைமுறை உருவாகி வருவதை அறிய முடிகிறது.
முட்டை, பன்னீருக்கு செம டிமாண்ட்
முட்டை மற்றும் பன்னீர் இன்னும் இந்தியர்களின் விருப்பப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக சிக்கன், கொண்டைக்கடலை, கிரீக் தயிர் மற்றும் மக்கானா போன்ற உணவுகள் அதிக தேவை பெற்று வருகின்றன. இதே நேரத்தில் புரோட்டீன் தயிர், புரோட்டீன் சிற்றுண்டி மற்றும் வே புரோட்டீன் பிரிவுகளிலும் விற்பனை வேகமாக வளர்ந்து வருகிறது.
உடல்நல உணவுகளுக்கு மக்கள் அதிக செலவு
காலை ஜிம் நேரமான 7 மணி முதல் 11 மணி வரை அதிக ஆர்டர்கள் பதிவாகின்றன என்பது இந்த மாற்றத்தின் சுவாரஸ்யமான பக்கம். உணவை வெறும் வயிறு நிரப்பும் தேவையாக மட்டும் பார்க்காமல், ஆரோக்கிய முதலீடாக பார்க்கும் மனப்போக்கு இந்தியாவிலும் தமிழகத்திலும் வேகமாக வேரூன்றிக் கொண்டிருக்கிறது.

